Mount Tai in China (Photo Credit: @roaneatan X)

ஏப்ரல் 19, தைஷான் (China): சீனாவில் தைஷான் (Taishan) என்ற நகரத்தில் தாய் மலை (Mount Tai) அமைந்துள்ளது. இந்த மழையுடன் சேர்ந்து தொடர்ந்து ஏழுமலைகள் இருக்கும். இது சீனாவின் மிகச்சிறந்த சுற்றுலா தளம் ஆகும். இந்த மலையில் ஏறுவதற்கு மொத்தம் 7,200 படிக்கட்டுகள் உள்ளன. இந்தியாவில் அதிக படிக்கட்டுகள் கொண்ட மலை என்றால் அது திருப்பதிதான். ஆனால் திருப்பதியிலேயே மொத்தம் 3500 படிக்கட்டுகள் மட்டுமே உள்ளன. அதைவிட இரண்டு மடங்கு அதிகமான படிக்கட்டுகளை தாய் மலை கொண்டுள்ளது. இந்த மலையை ஏறுவதற்கு நான்கு முதல் ஐந்து மணி நேரம் ஆகுமாம். Everest Fish Curry Masala Found Contaminated: மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்க கூடிய எத்திலீன் ஆக்சைடு.. எவரெஸ்ட் மீன் மசாலாவில் கண்டுபிடிப்பு..!

2003 ஆம் ஆண்டில் மட்டுமே ஆறு மில்லியன் மக்கள் இந்த மலையில் ஏறுவதற்காக 2003 ஆம் ஆண்டில் மட்டுமே ஆறு மில்லியன் மக்கள் இந்த மலையில் ஏறியுள்ளனர். இந்த மலையில் ஒரு அளவுக்கு மேல் ஏறிய பிறகு பனி மூட்டங்களாக காணப்படுமாம். இதனால் இந்த மலையின் உச்சிக்கு செல்பவர்கள் சொர்க்கத்திற்கு செல்வது போன்று உணர்வார்களாம். தற்போது இந்த மலையில் ஏறும் சுற்றுலா பயணிகளின் வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. 7200 படிகட்டுகளை ஏறும் பொழுது சிறிது நேரத்திலேயே அவர்களின் கால்கள் நடுங்க ஆரம்பிக்கின்றது. அதே நேரம் அனைவரும் குச்சியை வைத்துக்கொண்டு எப்படியாவது உச்சிவரை ஏறிவிட வேண்டும் என்று விறுவிறுப்பாக ஏறுகின்றனர்‌.