NMC Approves 6 Medical Colleges in TN: தமிழ்நாட்டில் 6 புதிய மருத்துவக்கல்லூரிகள் அமைக்க மத்திய சுகாதாரத்துறை ஒப்புதல்; அதிரடி உத்தரவு.!
தென்காசி, மயிலாடுதுறை உட்பட 6 மாவட்டங்களில் மருத்துவக்கல்லூரிகளை அமைக்க மத்திய அரசு உத்தரவிட்டு, அதற்காக 25 ஏக்கர் நிலங்களை அடையாளம் காணுமாறு மாநில அரசை கேட்டுக்கொண்டுள்ளது.
மே 24, புதுடெல்லி (New Delhi): இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் வசித்து வரும் மக்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை கிடைக்கவும், அவர்களின் உயிரை காப்பாற்றவும் அரசு உறுதிபூண்டுள்ளது. மாவட்ட அளவிலான மாணவர்களின் எதிர்கால கல்வி குறித்த விஷயத்திலும் அதே நிலைப்பாட்டில் அரசு உறுதியாக இருக்கிறது. அந்த வகையில், தமிழகமெங்கும் மாவட்ட அளவில் மருத்துவ கல்லூரிகள் அடுத்தடுத்து அமைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கடந்த மே மாதம் 6ம் தேதி மத்திய சுகாதாரத்துறை (Health Ministry) சார்பில், தமிழ்நாட்டில் அமைக்கப்படவுள்ள மருத்துவ கல்லூரிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து, தற்போது தமிழ்நாட்டில் 6 மருத்துவக்கல்லூரிகள் அமைக்க தேசிய மருத்துவ ஆணையம் (National Medical Commission) ஒப்புதல் வழங்கி இருக்கிறது. Love Couple Stunt Ride On Two Wheeler: காதலனுக்கு இச்சு கொடுத்து, இறுக்க கட்டி சாகச பயணம்; வீடியோ லீக்கானதால் வழக்கில் சிக்கிய காதல் ஜோடி.!
கூடுதலாக 6 மாவட்டங்களில் மருத்துவக்கல்லூரி: மத்திய அரசின் பங்களிப்போடு அமைக்கப்படும் மருத்துவக்கல்லூரிகளுக்காக (Medical Colleges In Tamilnadu), 25 ஏக்கர் நிலங்களை அடையாளம் காணவும் மாநில அரசுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி இருக்கிறது. அதன்படி, மயிலாடுதுறை, திருப்பத்தூர், தென்காசி, பெரம்பலூர், அரக்கோணம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் மருத்துவக்கல்லூரிகள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் இம்மாவட்டங்களில் மருத்துவ கல்லூரி அமைப்பதற்கு 25 ஏக்கர் நிலத்தை அடையாளம் கண்டு கையகப்படுத்தும் பணிகள் அடுத்தடுத்து நடைபெறவுள்ளன. விரைவில் மருத்துவக்கல்லூரி வளாகங்கள் அமைக்க ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.