Northerners Attacking The Banana Seller: வாழைப்பழ வியாபாரிக்கு கத்திரிக்கோலால் சரமாரி தாக்குதல்; வடமாநில இளைஞருக்கு காவல்துறையினர் வலைவீச்சு..!

விழுப்புரத்தில் வடமாநிலத்தவர் வாங்கிய வாழைப்பழத்திற்கு பணம் கொடுக்காமல் வியாபாரியிடம் தகராறில் ஈடுபட்டு, அவரை கத்திரிக்கோலால் குத்தி தாக்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Crime (Photo Credit: Pixabay)

மே 21, விழுப்புரம் (Viluppuram News): விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மருதூர் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவர், உழவர்சந்தை அருகே இரவு நேரத்தில் தள்ளுவண்டியில் வாழைப்பழங்களை வைத்து விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்றிரவு வடமாநிலத்தை சேர்ந்த 3 பேர், இவரிடம் வந்து வாழைப்பழம் வாங்கியுள்ளனர். Poco F6 Pro: 120Wபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வசதியுடன், போக்கோ F6 ப்ரோ ஸ்மார்ட் போன் விரைவில் அறிமுகம்..! விலை மற்றும் விவரக்குறிப்புகள் இதோ..!

அப்போது, வாழைப்பழம் வாங்கிவிட்டு அவர்கள் காசு கொடுக்காமல் செல்ல முயன்றுள்ளனர். அவர்களை மறித்து காசு கேட்டுள்ள சரவணனுக்கும் வடமாநிலத்தவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில், குடிபோதையில் இருந்த வடமாநிலத்தவரில் ஒருவர், தான் வைத்திருந்த கத்தரிக்கோலால் வாழைப்பழ வியாபாரி (Banana Seller) சரவணன் மீது சரமாரியாக தாக்கியுள்ளார். கத்திரிக்கோலால் குத்தியதில் ரத்த வெள்ளத்தில் மிதந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர்.

இதுதொடர்பாக, காவல்துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த நகர காவல்நிலைய காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இதனிடையே, அதில் 2 பேர் அங்கிருந்து தப்பியோடினர். குடிபோதையில் சிக்கிய ஒருவரை மட்டும் பிடித்து தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.