IPL Auction 2025 Live

Thoothukudi Murder: தூத்துக்குடியில் பரபரப்பு.. கஞ்சா போதையில் தீட்டிய திட்டம்.. டூவீலரில் சென்று 2 பேர் கொலை..!

தூத்துக்குடியில் முன்விரோதத்தில் அடுத்தடுத்து 4 பேரை கொலை செய்ய கஞ்சா போதையில் திட்டமிட்ட கும்பலை காவல் துறையினர் மடக்கி பிடித்தனர்.

Murder | Crime File Pic (Photo Credit: Pixabay / Pexels)

பிப்ரவரி 12, தூத்துக்குடி (Thoothukudi): தூத்துக்குடி தாளமுத்து நகர் காவல் நிலையத்திற்குள் நுழைந்த நபர் ஒருவர் தன்னை கொலை செய்யும் நோக்கில் ஒரு கும்பல் தேடி வருவதாகவும் அவர்களிடம் இருந்து தன்னை காப்பாற்று மாறும் வேண்டினார். உஷார் படுத்தப்பட்ட தனிப்படையினர் சந்தேகத்திற்கு இடமாக சுற்றியதாக நிலைய சேர்ந்த கார்த்தி பாண்டியன் அன்பு சிவபெருமாள் ஆகியோரை மடக்கிப்பிடித்தனர்.

கஞ்சா போதையில் தீட்டிய திட்டம்: இரத்த கரை படிந்த அரிவாள்களோடும் கஞ்சா போதையிலும் இருந்த அந்த கும்பல் தாங்கள் கருப்பசாமி என்பவரை கொலை செய்வதற்காக தேடி வந்ததாக தெரிவித்தனர். அதிர்ச்சி அடைந்த காவல் துறையினர்க்கு மேலும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக எல்லையில் ஒருவரையும் தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரில் மற்றொருவரையும் கொலை செய்துவிட்டு கருப்பசாமியை தேடி தூத்துக்குடிக்கு வந்திருப்பதாகவும் காவலரிடம் கஞ்சா போதையில் உலறினர்.

செய்துங்கநல்லூரில் செங்கல் சூளை தொழிலாளியாக ஐயப்பன் என்ற சுரேஷின் என்பவர் சனி என்று மாலையில் கொலை செய்யப்பட்டு இருப்பதும் பாளையங்கோட்டையைச் சேர்ந்த பாபு செல்வம் என்பவர் ரெட்டியார் பட்டியல் காட்டுப் பகுதியில் சம்பவத்தன்று காலையில் கொலை (Murder) செய்யப்பட்ட விவரமும் தெரிய வந்தது. அடுத்தடுத்து இரண்டு கொலைகளை சர்வசாதாரணமாக நிகழ்த்திவிட்டு மூன்றாவது நபரை கொலை செய்யும் நோக்குடன் தேடி வந்திருப்பது காவல் துறையினர் விசாரணையில் தெரிய வந்தது. Judgment On Former DGP Rajesh Das’s Plea: பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை.. முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்-க்கு 3 ஆண்டு சிறை தண்டனை..!

டூவீலரில் சென்று 2 பேர் கொலை: கார்த்திக் பாண்டியனுக்கு பெண் விவகாரம் தொடர்பாக பாபு செல்வத்துடன் மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் கார்த்திக் தரப்பைச் சேர்ந்த முத்துவேல் என்பவரை பாபு செல்வம் தரப்பினர் 15 நாட்களுக்கு முன்பு கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாபு செல்வம், ஐயப்பன் என்ற சுரேஷ், கருப்பசாமி மற்றும் ஜெகன் ஆகியோரை காவல்துறையினர் தேடிவந்த நிலையில் நான்கு பேரும் வெளியூரில் தங்கியதாக கூறப்படுகிறது.

இந்த தகவல் அறிந்து கஞ்சா போதையை ஏற்றிய கார்த்திக் தரப்பினர் தங்களுக்கு எதிரான பாபு செல்வம் மற்றும் அவரது கூட்டாளிகளை தேடிச் சென்று கொலை செய்ததாக கூறப்படுகிறது. இருவரை கொலை செய்துவிட்டு கருப்பசாமியை தேடி தூத்துக்குடி வந்ததாகவும் அவரை கொலை செய்த பிறகு ஜெகனை கொலை செய்ய அந்த கும்பல் திட்டமிட்டு இருந்ததாகவும் காவல் துறையினர் தெரிவித்தனர்.

தன்னை கார்த்திக் தரப்பு நோட்டமிடுவதை தெரிந்துகொண்டு கருப்பசாமி காவல் நிலையத்தில் தங்கமடைந்ததால் அவர் உயிர் தப்பியதாகவும் இல்லை என்றால் அவரையும் அந்த கும்பல் கொண்டு இருக்கலாம் எனவும் காவல் துறையினர் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலியானவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.