TN 12th School Results: 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 2024: தேர்ச்சி விகிதம், எந்த மாவட்டம் முதலிடம்?.. முழு விபரம் இதோ.!
தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
மே 06, சென்னை (Chennai): தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 1 முதல் 22 வரை நடத்தப்பட்டன. இந்தத் தேர்வுகளை சுமார் 8 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் எழுதியுள்ளனர். மேலும் முக்கிய பாடங்களின் தேர்வுக்கு முன்னதாக மூன்று முதல் ஐந்து நாட்கள் இடைவெளி வழங்கப்படும் வகையில் அமைக்கப்பட்டது. இதனால் மாணவர்கள் தயார் செய்ய போதுமான நேரம் கிடைத்தது.
தேர்ச்சி விகிதம்: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து கடந்த ஆண்டு அறிவியல், கலை மற்றும் வணிகவியல் பாடங்களில் 12 ஆம் வகுப்பு தேர்வில் சுமார் 8.51 லட்சம் மாணவர்கள் எழுதினர். கடந்த ஆண்டு 94.03 சதவீதமாக இருந்த தேர்ச்சி சதவீதம், 2022ல் 93.80 சதவீதமாக இருந்தது. இந்நிலையில் இந்தாண்டு தமிழ்நாட்டில் மொத்த தேர்ச்சி விகிதம் 94.56% ஆகும். 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் ஆண்களை விட பெண்களே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆண்கள் தேர்ச்சி விகிதம் 92.37%, பெண்கள் தேர்ச்சி விகிதம் 96.44% ஆகும். மேலும் பொதுத்தேர்வை 5,603 மாற்றுத்திறனாளிகள் எழுதினர். அவர்களில் 5,161 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வெழுதிய 125 சிறைவாசிகளில் 115 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அரசு பள்ளிகளில் தேர்ச்சி விதிகம் 91.32 சதவீதமாக உள்ளது. 2478 பள்ளிகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு உதவி பெறும் பள்ளிகளில் தேர்ச்சி விதிகம் 95.49 சதவீதம் சதவீதமாக உள்ளது. தனியார் பள்ளிகளில் தேர்ச்சி விதிகம் 96.7 சதவீதம் சதவீதமாக உள்ளது. பெண்கள் மட்டும் பள்ளிகளில் தேர்ச்சி விதிகம் 96.39 சதவீதம் சதவீதமாக உள்ளது. Co-education பள்ளிகளில் தேர்ச்சி விதிகம் 94.7 சதவீதமாக உள்ளது. Fish Rain: மழையோடு மழையாக வானில் இருந்து விழுந்த மீன்கள்; வியக்கவைக்கும் இயற்கையின் விந்தை.!
மாவட்ட அளவிலான தேர்ச்சி விகிதம்: மாவட்ட அளவிலான தேர்ச்சி விகிதத்தில், 97.45 சதவீதத்துடன் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. அதைதொடர்ந்து, ஈரோடு மற்றும் சிவகங்கை மாவட்டங்கள் 97.42 சதவீதத்துடன் 2வது இடத்தை பிடித்துள்ளன. அரியலூர் மாவட்டம் 97.25 சதவீதத்துடன் 3வது இடத்தை பிடித்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் 90.47% தேர்ச்சி பெற்று கடைசி இடத்தை பிடித்துள்ளது.
பாடவாரியாக தேர்ச்சி விகிதம்: தமிழில் 35 பேரும், ஆங்கிலத்தில் 7 பேரும், உயிரியலில் 652 பேரும், கணிதத்தில் 2,587 பேரும், தாவரவியலில் 90 பேரும், விலங்கியலில் 382 பேரும், கணினி அறிவியலில் 6,996 பேரும், வணிகவியலில் 6,142 பேரும், கணக்குப் பதிவியலில் ஆயிரத்து 647 பேரும், இயற்பியலில் 633 பேரும், வேதியியலில் 471 பேரும், பொருளியலில் 3,299 பேரும், கணினிப் பயன்பாடுகளில் 2,251 பேரும், வணிகக் கணிதம் மற்றும் புள்ளியலில் 210 பேரும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.