Son Murder To Father: மதுபோதையில் தந்தையை அடித்துக் கொன்ற மகன் - சொத்து தகராறால் நேர்ந்த சோகம்..!
சென்னையில் சொத்து பிரச்சனை காரணமாக தந்தை, மகன் இடையே ஏற்பட்ட தகராறில் மகன் தந்தையை அடித்து கொன்றுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மார்ச் 22, சென்னை (Chennai News): சென்னையில் உள்ள கொளத்தூரில் ராஜமங்கலம் பாபாநகர் பகுதியைச் சேர்ந்த மதுசூதனன் (வயது 64). இவர் ஒரு கூலித்தொழிலாளி ஆவார். மேலும், அவருடைய மனைவி, திருமணமான இரண்டு மகன்கள் மற்றும் மகள்களுடன் வசித்து வந்துள்ளார். மதுசூதனன் மீது பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. Inimel Teaser: ஸ்ருதி ஹாசனுடன் ஓவர் ரொமான்ஸ் செய்த லோகி.. “உனக்காடா ரொமான்ஸ் வராதுன்னு சொன்ன..” என கலாய்க்கும் நெட்டிசன்கள்..!
இந்நிலையில், தனது நான்காவது மகனான ஜார்ஜ்புஷ்ஷூடன் சொத்துக்களை பிரிப்பதில் இருவருக்கும் இடையே பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தந்தையும் மகனும் மதுபோதையில் இருந்த போது, தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மகன் வீட்டின் சமயலறையில் உள்ள சமையல் எரிவாயுவை கொண்டு அவரது தந்தையை அடித்துக் கொன்றுள்ளார்.
இதனையடுத்து, ஜார்ஜ்புஷ்ஷை வீட்டில் இருந்தவர்கள் அனைவரும் அவரை அடித்து தாக்கியுள்ளனர். இந்த தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் காயமடைந்த அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக அவர் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சொத்து பிரச்சனையில் மகன் தந்தையை கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.