மார்ச் 22, சென்னை (Cinema News): கமல்ஹாசன் வரிகளில், ஸ்ருதிஹாசன் (Shruti Haasan) இசையமைப்பில், லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) நடித்துள்ள ‘இனிமேல்’ (Inimel) ஆல்பம் பாடலின் அறிவிப்பை அண்மையில் ராஜ்கமல் நிறுவனம் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் வெளியிட்டது. இந்நிலையில், இதன் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. வரும் 25-ம் தேதி இந்தப் பாடல் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. HONOR Magic6 India Launch: "பந்தயத்துக்கு நாங்க வரலாமா.." புதிய மாடல் மொபைலுடன் இந்தியாவிற்கு வரும் ஹானர்..!
இந்த டீசர் வீடியோவில் லோகேஷ் கனகராஜ், ஸ்ருதி ஹாசன் இடையே ஏகப்பட்ட ரொமன்ஸ் காட்சிகள் இடம் பெற்று இருக்கிறது. இந்த டீசரை பார்த்த அனைவரும் ஆச்சர்யப்பட்டது லோகேஷா இப்படி ரொமான்ஸ் செய்கிறார் என்பது தான். ஏனெனில் அவரது படங்களில் ஹீரோயின்களை கருணையே இல்லாமல் கொலை செய்வதை வழக்கமாக வைத்திருப்பவர் லோகேஷ். அவருக்குள் இப்படி ஒரு ரொமாண்டிக் பக்கம் இருப்பது தான் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.