IPL Auction 2025 Live

Lok Sabha Elections 2024: மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை.. 13 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி..!

தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி தொடங்கி எண்ணப்படுகின்றன.

Lok Sabha Elections 2024 (Photo Credit: eci.gov.in)

ஜூன் 4, சென்னை (Chennai): அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இந்தியாவை ஆளப் போவது யார் என்பதை தெரிந்துகொள்ள மக்கள் அனைவரும் ஆவலோடு காத்திருக்கும் நிலையில், 2024 இந்தியா தேர்தல்கள் முடிவுகள் இன்று வெளியாகிறது. 14 சுற்றுகளாக எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும். மொத்தம் 64.20 கோடி பேர் வாக்குரிமையை செலுத்தி உள்ளனர். 8,000-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் மக்களின் முடிவை எதிர்நோக்கி தங்களின் வாக்குகளை அறிந்து வெற்றி/தோல்வியை சந்தித்து வருகின்றனர்.

மொத்தம் 543 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. ஆட்சியைப் பிடிக்க 272 பெரும்பான்மை போதுமானது. இந்தப் பெரும்பான்மையை பாஜக கூட்டணி பெறும் என்றே கருத்துக் கணிப்புகள் கூறின. தேசிய ஜனநாயகக் கூட்டணி 350 இடங்களுக்கு மேல் வெற்றி பெறக்கூடும் என்றும், எதிர்க்கட்சியான இந்திய கூட்டணி 125 முதல் 150 இடங்கள் வரை பெறலாம் என்றும் பல கணிப்புகள் தெரிவித்தன. ஆனால் இந்திய தேர்தல் ஆணைய இணையதளத்தின் தகவலின் படி, பாஜக கூட்டணி 294 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது, எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி 231 இடங்களில் முன்னிலையில் உள்ளது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளுக்கு மாறாக முடிவுகள் வெளிவருவது தான் தற்போது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

திமுக கூட்டணி வெற்றி: இதில் தமிழ்நாட்டில் 39 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை 39 மையங்களில் 43 கட்டிடங்களில் உள்ள 234 அறைகளில் நடைபெறுகிறது. இதில் தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கனிமொழி வெற்றி பெற்றுள்ளார். நீலகிரி மக்களவை தொகுதியில் திமுகவின் ஆ.ராசா வெற்றி பெற்றுள்ளார். திருவள்ளூர் மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் 3,77,748 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். தருமபுரி மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் மணி தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாமக, அதிமுக வேட்பாளர்களை விட 26,853 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

தஞ்சை மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் முரசொலி 2.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சச்சிதானந்தம் வெற்றி பெற்றுள்ளார். கடலூர் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட, காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் வெற்றி பெற்றுள்ளார். வட சென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி வெற்றி பெற்றுள்ளார். Amit Shah Wins In Gandhinagar: மக்களவைத் தேர்தல் முடிவுகள்.. காந்திநகரில் அமித் ஷா வெற்றி..!

நாகை மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் வை.செல்வராஜ் வெற்றி பெற்றுள்ளார். மதுரை மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன் வெற்றி பெற்றுள்ளார். நாகை மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்ட வை.செல்வராஜ் 1,85,965 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார்.

கடலூர் மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் விஷ்ணு பிரசாத் 1,38,307 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கும் நிலையில், அவருக்கு வெற்றி வாய்ப்பு அதிகரித்துள்ளது. விளவங்கோடு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பட் வெற்றி பெற்றார்.