
ஜூன் 17, சென்னை (Chennai News): ஊழல் மதவாத அரசியலுக்கு எதிராக நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யத்தை தொடங்கி இருந்தார். கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலில் நடிகர் கமல்ஹாசன் கோயம்புத்தூர் தொகுதியில் வேட்பாளராகவும் களமிறங்கி இருந்தார். தற்போது திமுக கூட்டணியில் தான் அவர் அங்கம் வகித்து மாநிலங்களவை சீட் பெறுகிறார். itanidaye, மக்கள் நீதி மய்யத்தின் வட்டாரத்தில் தற்போது பேசப்படும் பெயராக சந்திரசேகர் என்பவர் இருக்கிறார். இவர் மக்கள் நீதி மய்யம் (Makkal Needhi Maiam) கட்சியின் பொருளாளராக பொறுப்பு வகித்து வந்துள்ளார். சமீப காலமாக கட்சியின் செயல்பாடுகளில் இருந்து ஒதுங்கி இருந்தவர், வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் எம்எல்ஏ வேட்பாளராக ஆதரவு கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்த விஷயத்திற்கு கமல் ஒத்துழைக்க வேண்டி மக்கள் நீதி மய்ய வேட்பாளர்களின் செலவை தானே ஏற்றுக் கொள்வதாக சொல்லியுள்ளதாகவும் கூறப்படுகிறது. Madurai News: பள்ளிக்கு செல்ல விரும்பாத தோழிகள் விபரீத முடிவு.. மதுரையில் பதறவைக்கும் சம்பவம்.. பெற்றோர் கவனம்.!
கமலுடன் நெருக்கம் என தகவல்:
இதனால் கமலின் நிழல் போல அவர் மாறி இருப்பதாக அரசியல் வட்டாரங்களும் கூறுகின்றன. திருப்பூரில் செயல்பட்டு வரும் அனிதா டெக்ஸ்காட் நிறுவனத்தின் அதிபராக இருந்து வரும் சந்திரசேகர் தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களிலும் தனது நிறுவனத்தின் வளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். துணி, மருத்துவ உபகரணங்கள் சப்ளை இவரது முதன்மை தொழிலாகும். கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் சுகாதாரத் துறையில் பல டெண்டர்களை எடுத்து செல்வாக்காக வளம் வந்த சந்திரசேகர், அன்றைய சுகாதாரத் துறை அமைச்சரை கவனித்ததாகவும் கூறப்படுகிறது. திமுக ஆட்சியிலும் இவர் அதிகாரிகளுடன் நெருக்கம் காண்பித்து பொங்கல் பரிசுக்கான மொத்த சப்ளை தொகுப்பையும் எடுத்துக் கொண்டார். இந்த விஷயம் திமுக ஆட்சிக்கு இன்று வரை மிகப்பெரிய அவப்பெயராகவும் நீடித்து வருகிறது. வெல்லம், நெய் போன்றவற்றை தரமில்லாமல் வழங்கியதால் இவரது நிறுவனத்தை அரசு கருப்பு பட்டியலில் வைக்க எடுத்துரைத்தும் அவரது செல்வாக்கால் அது பலன்கள் இல்லாமல் போய் உள்ளதாக கூறப்படுகிறது.
குழப்பம் நிலவுவதால் சர்ச்சை:
தமிழகத்தை தாண்டி பிற மாநிலத்திலும் தனது தொழில் கோலோச்சுவதற்கு தமிழக பாஜக நிர்வாகிகளுடன் இவர் இணக்கம் காண்பித்திருக்கிறார். தனது தொழிலுக்காகவும், எதிர்கால செயலுக்காகவும் தற்போது பணத்தை வாரி வழங்கும் வள்ளலாக தற்போது செயல்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் கமல் தனித்துப் போட்டியிட இவரே முக்கிய காரணம் என்றும், திமுக ஆட்சிக்கு வந்து விடக்கூடாது என்பதால் அதிமுக தரப்பில் இருந்து பெரும் தொகை ஒன்றை வாங்கிக் கொண்டு கமலை களம் இறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அரசியல் நிபுணர்கள் சொல்கின்றனர். அந்த பணப்பிரிப்பின் போது தான் வருமானவரித்துறை திடீர் சோதனையும் அவரது வீடு மற்றும் அலுவலகத்தில் நடத்தி இருந்தது. அதிமுகவிடம் பணம் பெற்று கமல்ஹாசனை தனியே களம் காண வைக்க முயற்சி எடுத்த சந்திரசேகர், தற்போது திமுக கூட்டணியில் இருப்பது திமுகவினருக்கும் பிடிக்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது. மேலும், நம்மிடம் சீட்டு வாங்கிக் கொண்டு எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு விடுவார்கள் என்றும், இவரை கமல்ஹாசன் ஒதுக்கி வைக்க வேண்டும் என்றும் திமுகவினர் கூறி வருகின்றனர். தற்போது அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வர நினைத்து தேவையான பணிகளை செய்து வரும் நிலையில், தனது தொழிலுக்கு திமுக விட அதிமுகவே சரியாக இருக்கும் என்று நினைக்கும் சந்திரசேகர், அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.