Friend Killed: மதுபோதையில் நடந்த தகராறு.. தேனியை பதறவைத்த கொலை.. கல்லைக்கட்டி இறக்கிய நண்பர்கள்.!
நண்பர்களுடன் மதுபானம் அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் 20 வயது நண்பனை இளைஞர்கள் கும்பல் கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது.
டிசம்பர் 29, உத்தமபாளையம்: நண்பர்களுடன் மதுபானம் அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் 20 வயது நண்பனை இளைஞர்கள் (Friends Killed Another one While Are all drinking) கும்பல் கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது.
தேனி மாவட்டத்தில் உள்ள உத்தமபாளையம் (Uthamapalayam, Theni), தாமஸ் காலனி கிராமத்தை சேர்ந்தவர் செல்வம். இவரின் மனைவி செல்வி (வயது 39). தம்பதிகளுக்கு ஹிருத்திக் செல்வா (வயது 20), கிஷோர் கரண், கீர்த்தனா என 3 குழந்தைகள் இருக்கின்றனர். ஹிருத்திக் செல்வா கடந்த 24ம் தேதி இரவில் வீட்டை விட்டு வெளியேறியவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அவரை கண்டறிந்துதர கூறி உத்தமபாளையம் காவல் நிலையத்தில் செல்வி புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் காவல் துறையினர் ஹிருத்திக் செல்வனின் நண்பர்களிடம் விசாரணை நடத்தினர். ஹிருத்திக் செல்வாவுக்கு தேவசகாயம் என்பவரின் மகனான பிரின்ஸ், பிரதீப் ஆகியோர் நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். கடந்த டிசம்பர் 24ல் இவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு இருக்கிறது. அவர்களுக்குள் தாக்குதலும் நடந்த நிலையில், அசம்பாவிதத்தை தவிர்க்க செல்வி மகனை தாத்தாவின் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார்.
மது நாட்டிற்கும், வீட்டிற்கும், உடல் நலத்திற்கம் கேடு.. அது உயிரை பறிக்கும்.. Courtralam Child: குற்றாலத்தில் அடித்து செல்லப்பட்ட 4 வயது சிறுமி.. விரைந்து செயல்பட்ட இளைஞரால் குடும்பத்தினர் மகிழ்ச்சி.! வீடியோ வைரல்.!
அதன்பின்னர், நண்பனுக்கு தொடர்பு கொண்டவர்கள் ஹிருத்திக் செல்வனை நேரில் அழைத்த பிரின்ஸ், சுதர்சன், கோபி கிருஷ்ணா, வினோத் ஆகியோர் சேர்ந்து மதுபானம் அருந்தியுள்ளனர். அப்போது மீண்டும் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு கைகலப்பு ஏற்படவே, ஹிருத்திக் செல்வனை கோபி, பிரின்ஸ், சுதர்சன், வினோத் சேர்ந்து கத்தியால் குத்தி கொலை செய்திருக்கின்றனர். அவரின் உடலை மறைக்கவும் முடிவு செய்து, கல்லை கட்டி மாதா கோவில் அருகேயிருக்கும் தோட்டத்து கிணற்றில் உடலை வீசியுள்ளனர்.
இதனையடுத்து, தீயணைப்புத்துறையினர் உதவியுடன் சடலத்தை மீட்ட அதிகாரிகள் பிரேத பரிசோதனைக்கு தேனி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குற்றவாளிகளான கோபி கிருஷ்ணா (வயது 19), பிரின்ஸ் (வயது 22), வினோத் (வயது 25), சுதர்சன் (வயது 20) ஆகியோரை கைது செய்து உத்தமபாளையம் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய இருவரும் தேடப்பட்டு வருகின்றனர்.
Drinking Alcohol is Injurious to Health! Drinking Spoil Future., It Kills!!
(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் டிசம்பர் 29, 2022 09:40 PM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)