Thoothukudi Couple Honor Killing: காதல் திருமணம் செய்த இளம் ஜோடி வீடுபுகுந்து கொடூரமாக வெட்டிக்கொலை; பெண்ணின் தந்தை கைது; ஆறு பேர் கும்பலுக்கு வலைவீச்சு.!

தூத்துக்குடி மாவட்டத்தை அடுத்தடுத்து உலுக்கும் கொலைகள், தமிழக அளவில் மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கின்றன. ஜாதிய கொலைகளுக்கு பெயரெடுத்து வரும் தென்மாவட்டத்தில் தற்போது ஆணவக்கொலை நடந்துள்ளது.

Victim Mari Selvam | Crime File Pic (Photo Credit: Facebook Pixabay)

நவம்பர் 03, தூத்துக்குடி (Thoothukudi Crime News): தூத்துக்குடி  (Thoothukudi) மாவட்டத்தில் உள்ள முருகேசன் நகரில் வசித்து வருபவர் மாரிச்செல்வம். இவர் திருவிக நகரில் வசித்து வரும் கார்த்திகா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

இருவரும் ஒரே சமூகத்தை (Same Caste Love Marriage) சேர்ந்தவர்கள் என்றாலும், காதல் விவகாரத்தில் பெண்ணின் பெற்றோர் திருமணத்திற்கு உடன்படவில்லை. காதல் ஜோடி (Couple) காதலில் உறுதியாக இருந்துள்ளது.

இதனையடுத்து, கடந்த தேவர் ஜெயந்தி (Thevar Jayanthi 2023) அன்று, கார்த்திகாவை தன்னுடன் கோவில்பட்டி (Kovilpatti, Thoothukudi ) அழைத்து சென்ற மாரிச்செல்வம் திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு பின் இருவரும் மாரிச்செல்வத்தின் வீட்டில் இருந்துள்ளனர். Dhoni Handsome Look At SRK Birthday: ஷாருக்கானின் பிறந்தநாளில் அசத்தல் தோற்றத்துடன் தல தோனி; வெளியான போட்டோவால் ரசிகர்கள் மகிழ்ச்சி.! 

இந்நிலையில், நேற்று மாலை புதுமண ஜோடி (New Married Couple Killed In Thoothukudi) வீட்டில் தனியாக இருந்த நிலையில், இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கும்பல், இருவரையும் பயங்கர ஆயுதத்தால் வெட்டிச்சாய்த்து அங்கிருந்து தப்பிச்சென்றது.

இந்த சம்பவத்தில் காதல் திருமணம் செய்த ஜோடி நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. தகவல் அறிந்து வந்த சிப்காட் காவல் துறையினர், இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

Couple Mari Selvam - Karthika (Photo Credit: X)

சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், கார்த்திகாவின் தந்தை உட்பட அவரின் உறவினர்களால் கொலை நடத்தப்பட்டது அம்பலமானது. Urfi Javed Arrested?: பிரபல ஹிந்தி நடிகை காவல்துறையினரால் கைது?.. ரசிகர்களுக்கு அதிர்ச்சி..! விபரம் உள்ளே.! 

கொலையாளிகளை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்ட நிலையில், கார்த்திகாவின் தந்தை முத்துராமலிங்கம், பரத், கருப்புசாமி ஆகியோருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, தேடப்பட்டு வந்தனர்.

தற்போது இவ்விவகாரத்தில் கார்த்திகாவின் தந்தை முத்துராமலிங்கம் தனிப்படை காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வசதிபடைத்த குடும்பத்தை சேர்ந்த கார்த்திகா, நடுத்தர வர்கத்தை சேர்ந்த மாரிச்செல்வதுடன் (Rich Vs Poor Family) காதல் வயப்பட்டதே கொலைக்கு காரணமாக இருக்கலாம் என உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தலைமையில் விசாரணை தொடர்ந்து நடக்கிறது.

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement