Bike Stunts: அதிவேக பைக்: தற்கொலை படையாக மாறும் சிறுவர்கள்?..!
திருவள்ளூர் மாவட்டம் வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் பைக் ரேஸில் ஈடுபட்ட மூன்று இளைஞர்களை கண்டறிந்து, அவர்களிடம் இருந்து 3 பைக்குகள், ஓட்டுநர் உரிமம் மற்றும் வீடியோ எடுக்க பயன்படுத்திய செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் காவல்துறையினர் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
டிசம்பர் 18, திருவள்ளூர் (Thiruvallur): தமிழகத்தில் விபத்துக்களை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் வாகன சோதனைகளும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சில சிறுவர்கள் அதிவேக பைக்குகளை வைத்து, சாகசத்தில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. மேலும் சாலைகளில் மித வேகத்தில் செல்லும், முதியவர்கள், பெண்கள் அச்சுறுத்தும் விதமாக செல்வதும், சில சமயங்களில் விபத்துகளும் நிகழ்ந்து வருகிறது. வாகன ஓட்டிகள் சிலர் இவர்கள் தற்கொலை படை போன்றவர்கள், சாலையில் நடந்து, மித வேகத்தில் செல்பவர்களையும் விபத்து ஏற்படுத்தி உயிரிழப்புகள் ஏற்படுகின்றன குமுறுகின்றனர். Trending Video: ஒன்றில் தொடங்கி 9ல் முடிந்த மெகந்தி: அசரவைக்கும் மெகந்தி கலைஞரின் சிந்தனைத்திறன்: வைரல் வீடியோ இதோ.!
அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டம் வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபடுவதாக ஆவடி காவல் ஆணையர் அவர்களுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து செங்குன்றம் போக்குவரத்து போலீசார் பைக் ரேஸில் (Bike Stunts) ஈடுபட்ட மூன்று இளைஞர்களை கண்டறிந்து அவர்களிடம் இருந்து 3 பைக்குகள், ஓட்டுநர் உரிமம் மற்றும் வீடியோ எடுக்க பயன்படுத்திய செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.