Pregnant Women Died: 2 மணிநேரம் தாமதமான அவசர ஊர்தி சேவை.. 9 மாத கர்ப்பிணியுடன் வயிற்றில் இருந்த சிசுவும் பரிதாப பலி.!
பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணிக்கு அடிப்படை மருத்துவ வசதிகள் கூட இல்லாத கிராமம், அங்கு செல்ல சரியான வழி இல்லாததால் தாமதமான ஆம்புலன்ஸ் சேவை என கர்ப்பிணி பெண்ணும் - சேயும் துடிதுடிக்க உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.
மார்ச் 06, வாணியம்பாடி (Tirupattur News): திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி (Vaniyambadi, Tirupattur), வெலதிகாமணி பெண்டா பகுதியில் வசித்து வருபவர் அசோக். இவரின் மனைவி சரண்யா. இவர் 9 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். நேற்று அதிகாலை திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால் சரண்யாவின் உறவினர்கள் தமிழ்நாடு அரசின் (108 Emergency Service Ambulance) அவசர ஊர்திக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் வசித்து வரும் பகுதி மலைக்கிராமம் (HIlls Sector) என்பதால், அவசர ஊர்தி 3 மணிநேரம் தாமதமாக வந்துள்ளது. இதனால் அடிப்படை மருத்துவ உதவி கிடைக்காமல் கர்ப்பிணி சரண்யா, அவரின் வயிற்றில் இருந்த (9 Month Pregnant Women Died With Baby) சிசு என தாயும்-சேயும் பரிதாபமாக உயிரிழந்தனர். Rowdy Killed: வீட்டில் உறங்கிக்கொண்டு இருந்த முன்னாள் ரௌடியை மனைவி முன்பே கூறுபோட்ட 10 பேர் கும்பல்... சென்னையில் பயங்கரம்.!
இது அக்கிராமத்தினரை ஆத்திரத்திற்கு உள்ளாக்கவே, தங்களின் கிராமத்தில் உரிய மருத்துவ வசதிகள் இல்லை என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வாணியமப்படி - குப்பம் சாலையில் நடந்த போராட்டம் 2 மணிநேரம் நடைபெற்றது.
மக்கள் போராட்டம் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் மற்றும் வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா தலைமையிலான அதிகாரிகள், மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் அங்கிருந்து அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர்.