Annamalai About DMK: எம்.ஜி.ஆரின் வார்த்தைகளை உறுதியாக்கிய திமுக? - தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை சரமாரி விமர்சனம்.!
திமுக என்ற தீயசக்தியை எதிர்க்க அதிமுகவில் உள்ள இரண்டு அணிகள் ஒன்றிணைய வேண்டும், அதுவே பாஜகவின் நிலைப்பாடு என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பேசினார்.
பிப்ரவரி 03, சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை (Annamalai), பாஜக தேசிய பொதுச்செயலர் சி.டி ரவி (C.T Ravi) ஆகியோர் இன்று காலை முன்னாள் முதல்வர்கள் அதிமுக எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் (Edappadi Palanisamy & O.Panneer Selvam) ஆகியோரை தனித்தனியே நேரில் சந்தித்து அவர்களுக்கு இடையேயான பிரச்சனைகளை விரைந்து பேசி முடித்துக்கொள்ள அறிவுறுத்தி இருந்தனர்.
அதனைத்தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, "தேசிய தலைவர் ஜே.பி நட்டாவின் (J.P Nadda) அறிவுறுத்தலின் பேரில் அகில இந்திய பொதுச்செயலாளர் சி.டி ரவி வந்துள்ளார். 1972 ல் அதிமுக கட்சி (AIADMK) தொடங்கப்பட்டபோது, புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் (M.G. Ramachandiran) திமுகவை தீய சக்தி என்ற வார்த்தையை பயன்படுத்தி இருந்தார்.
அந்த நிலை இன்று வரை 2023-லும் அப்படியே உள்ளது. தமிழகத்திற்கு எதிராக, தமிழ் கலாச்சாரத்திற்கு (Tamil Culture) எதிராக திமுக செயல்படுகிறது. ஈரோடு இடைத்தேர்தலை (Erode By Poll) பொறுத்தமட்டில் திமுக ஆட்சி மக்களிடம் விலையேற்றம், வரி, மின்சார விவகாரம், தமிழக கலாச்சாரம் என பல வகையில் அவப்பெயரை பெற்றுள்ளது. திராவிட முன்னேற்ற கழகத்தினர் தமிழக மக்களின் கலாச்சாரத்திற்கு எதிராக இருக்கின்றனர். Pala Karuppiah Party: தமிழகத்தில் உதயமாகிறது “தமிழ்நாடு தன்னுரிமை கழகம்”.. மக்களுக்கு நாங்கள் செய்யப்போவது இதுதான் – பழ. கருப்பையா அதிரடி பேட்டி.!
இந்நேரத்தில் தமிழகத்திற்கு தேவையானது உறுதியான, நிலையான தேசிய ஜனநாயக கூட்டணி. அதனாலேயே இன்று காலை முன்னாள் முதல்வர்கள் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரை சி.டி. ரவி நேரில் சந்தித்து தேசிய தலைவர்களின் அறிவுரையை கூறி வந்துள்ளார்கள். அதே நேரத்தில், திமுகவை எதிர்க்க வேண்டும் என்றால் உறுதியான, நிலையான வேட்பாளர் வேண்டும்.
அதற்கு தேவை தனித்தனியே நிற்பதை விட ஒன்றுபட வேண்டும். கடைசி நேர வேட்புமனுத்தாக்கள் 7ம் தேதி வரை இருப்பதால், நாம் இணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும் என கூட்டணிக்கட்சி தலைவர்களை சி.டி அவர்கள் வலியுறுத்தி இருக்கிறார். அவர்கள் ஒன்றிணைவதே பாஜகவின் (TN BJP) முக்கிய நோக்கமும் கூட" என கூறினார்.