Annamalai On AIADMK: எடப்பாடியின் சர்ச்சை பேச்சு? "அதிமுக Vs பாஜக" பிரிவுக்கு காரணம் என்ன?.. உண்மையை போட்டுடைத்த அண்ணாமலை..!
இதுதான் உண்மை என அண்ணாமலை பேசி இருக்கிறார்.
ஆகஸ்ட் 26, சென்னை (Chennai News): கடந்த 2014ம் ஆண்டு முதல் மத்தியில் ஆட்சியை கையில் வைத்திருக்கும் பாஜக (BJP), ஒவ்வொரு மாநில அளவிலும் தன்னை வளர்த்துக்கொண்டு வருகிறது. தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் திமுக (DMK), பாஜக இடையே முரண்பாடு கொண்ட கருத்துக்கள் நிலவி வந்ததால், பாஜக, தமிழ்நாடு மாநில அளவிலான மிகப்பெரிய கட்சியான அதிமுகவுடன் (AIADMK) கைகோர்த்தது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் (Jayalalithaa) கைகளில் ஆட்சியும்-கட்சியும் இருந்தபோது, 2014 மக்களவைத் (2014 Parliament Election) தேர்தலில் மோடியா? இந்த லேடியா? (Modi Vs Jayalalithaa) (ஜெயலலிதா-வா) என்ற கேள்வியுடன் தீவிர பிரச்சாரங்கள் முன்வைக்கப்பட்டன.
"மோடியா? இந்த லேடியா?" முதல் "மோடி எங்கள் டாடி" வரை:
2016ல் ஜெயலலிதா மறைந்தபின் அதிமுகவில் நிலவிய உட்கட்சி குழப்பம் உட்பட பல்வேறு காரணங்களுக்கு பின்னர், ஆண்டுகள் கழித்து 2021 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக-பாஜக இடையே கூட்டணி இணக்கமானது. கூட்டணி உறுதியான பின்னர் இருதரப்பு தலைவர்களும் தீவிர ஒற்றுமையுடன் களப்பிரச்சாரங்களை மேற்கொண்டு இருந்தனர். ஜெயலலிதா இருந்தபோது மோடியா? லேடியா? என்ற கேள்விகள் எழுந்து, 2021ல் "மோடி எங்கள் டாடி" என்ற பேச்சை உருவாக்கியது. அதனைத்தொடர்ந்து, அவ்வப்போது பாஜக - அதிமுக தலைவர்கள் இடையே சில வார்த்தை மோதல்கள் ஏற்பட்டு வந்தன.
கருத்து வேறுபாடு:
எனினும் தேர்தல் கருதி கூட்டணியை உடைக்காமல் இருந்து வந்த நிலையில், பிரச்சனைகளும் பேசி முடிக்கப்பட்டன. வார்த்தை கருத்துக்கள் முற்றி 2021 சட்டப்பேரவை தேர்தலை தொடர்ந்து 2024 மக்களவை தேர்தலில் பாஜக - அதிமுக கூட்டணி தொடரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பாஜகவின் எதிர்காலம், அதிமுகவின் தமிழ்நாடு (TN BJP) மாநில அளவின் நிலை, அண்ணாமலையின் (Annamalai) செயல்பாடுகள் போன்றவை அதிமுகவை பின்னுக்கு தள்ளும் சூழலை உண்டாக்கியது. இதனால் கருத்து வேறுபாடுகள் முற்றி, ஒருகட்டத்தில் அதிமுக - பாஜக கூட்டணி உடைவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. K Armstrong: கே. ஆம்ஸ்ட்ராங் கொலை விவகாரம்; முக்கிய குற்றவாளி திருமலைக்கு திடீர் நெஞ்சுவலி.. மருத்துவமனையில் அனுமதி.!
சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த பாஜக தலைமை:
இதற்கு பின் அதிமுகவுக்கு எதிரான கருத்துக்களை பாஜக புள்ளிகளும், பாஜகவுக்கு எதிரான கருத்துக்களை அதிமுக புள்ளிகளும் முன்வைத்தனர். மேலும், பாஜக தலைவர்கள் இனி திராவிட கட்சிகளுடன் பாஜக கூட்டணியே வைத்துக்கொள்வது எனவும் உறுதிபட தெரிவித்தனர். இந்த கருத்துக்கு பாஜகவுக்கும் இருதரப்பு ஆதரவு பிரிந்த காரணத்தால், அண்ணாமலைக்கு எதிராக சில சலசலப்பு வாதங்களும் உண்டாகின. ஆனால், அனைத்துக்கும் கட்சியின் தலைமை முற்றுப்புள்ளி வைத்து, அண்ணாமலையை தொடர்ந்து தலைவராக பணிசெய்ய அறிவுறுத்தி இருந்தது.
உண்மையை உடைத்த அண்ணாமலை:
இந்நிலையில், நேற்று சென்னையில் 2024 மக்களவைத் தேர்தலில் வேட்பாளராக களமிறங்கியவர்கள், அவர்களுக்காக உழைத்த பாஜக தொண்டர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை, அதிமுக கூட்டணியை விரும்பும் சில பாஜக மூத்த தலைவர்கள் இங்கு இருக்கிறார்கள் என்றாலும், சில முக்கிய தகவலை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இந்த காரணத்தால்தான் அதிமுக - பாஜக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது எனவும் அதிர்ச்சி தகவலை பகிர்ந்துகொண்டார்.
சோவின் வார்த்தைகளை உண்மையாக்கிய திமுக அரசு:
இதுகுறித்து அண்ணாமலை பேசுகையில், "திமுக அரசு ஒரேயொரு குடும்பத்திற்காக சிந்தித்து வருகிறது. துணை முதல்வராக உதயநிதி பொறுப்பேற்க வேண்டும் என திமுக அமைச்சர்கள் விரும்பி வருகிறார்கள். அவர் துணை முதல்வரானால், அமைச்சர்களும் தங்களின் வாரிசுகளை பதவியில் அமர்த்துவார்கள். இதுவே திராவிட மாடல். மறைந்த அமரர் சோ, தமிழ்நாட்டில் மாநில அளவில் இந்துக்களுக்கு எழுச்சி உண்டாகும்போது, திமுக பால் காவடியும் எடுக்கும் என கூறி இருந்தார். 6-Year-Old Girl Rape: 6 வயது மகளை பலாத்காரம் செய்த தந்தை; புரட்சி பாரதம் கட்சிப்பிரமுகர் போக்ஸோவில் கைது.!
திமுகவுக்கு கடவுள் முருகன் தண்டனை கொடுப்பார்:
அதனை உறுதிசெய்யும் பொருட்டே திமுக பழனியில் முருகனுக்கு மாநாடு நடத்தி இருக்கிறது. பழனி முருகன் அசாதாரண சக்தியை கொண்டவர். அவரை அரசியலுக்கு இவர்கள் பயன்படுத்தினால் மண்ணோடு மண்ணாக்கிவிடுவார். சனாதன தர்மத்தை அழிப்பதாக சபதம் ஏற்றவர்கள் இன்று பழனிக்கு பால் காவடி எடுத்து வருகிறர்கள். பெரியாரின் ஆட்சி என்று கூறுபவர்கள், தமிழ்ப்பண்பாட்டின் அடையாளமான திருவள்ளுவர், தொல்காப்பியர், கம்பரை தவறாக விமர்சனம் செய்தவரை ஏற்றுக்கொள்கிறார்கள். கடந்த 70 ஆண்டுகளாக தமிழ் கலாச்சாரத்தை சீரழித்த நபர்களுக்கு, ஆண்டிக்கோலத்தில் இருக்கும் முருகன் தண்டனை கொடுப்பார்.
என்னை விமர்சிக்க பழனிசாமிக்கு தகுதி உண்டா?.
எனது பார்வையில் திமுக-அதிமுக என இரண்டு கட்சிகளுமே ஒன்றுதான். இரண்டு கட்சிகளுக்கும் வித்தியாசம் இல்லை. திராவிடக்கட்சியை அகற்ற பாஜகவால் மட்டுமே இயலும். அதற்காகவே உழைக்கிறோம். அதிமுக எடப்பாடி பழனிச்சாமி என்னைப்பற்றி பேசியுள்ளார். கொலை வழக்கு விவகாரத்தில் அன்றைய அமைச்சரின் உதவியுடன் தப்பித்தவறி, எனக்கு பாடம் எடுக்க வேண்டாம். கூவத்தூரில் கட்சி நடத்திய அலங்கோலத்தை யாராலும் மறக்க இயலாது. பணம் கொடுத்து, காலில் விழுந்து பதவி வாங்கியவர், காவல்துறையில் நேர்மையாக பணியாற்றிய விவசாயியின் மகனை பற்றிப்பேச அவருக்கு என்ன தகுதி உள்ளது?. 2026 மக்களவை தேர்தலில் அதிமுகவுக்கு நான்காவது இடம் கூட கிடைக்காது. அதிமுக, திமுகவுடன் பாஜக எப்போதும் கூட்டணியை அமைக்காது.
கூட்டணி விரிசல் அடைய இதுவே காரணம்:
இதனை உறுதியுடன் என்ன கூற முடியும். காங்கிரசை போல தொண்டர்களை மதிக்காத கட்சி பாஜக இல்லை. பிரதமர் நரேந்திர மோடி வாரணாசி தொகுதியில் போட்டியிடும் வேளையில், கூட்டணிக்கட்சி தலைவர்கள் அனைவரும் வாரணாசிக்கு செல்ல முன்னதாகவே திட்டமிடப்பட்டது. அப்போது பேசிய எடப்பாடி பழனிச்சாமி, தோற்கப்போகும் மோடிக்காக நான் ஏன் வாரணாசிக்கு வர வேண்டும் என கேட்டார். இதுவே அதிமுக - பாஜக கூட்டணியின் முறிவுக்கு முக்கிய காரணம் ஆகும். இதுவே உண்மை" என பேசினார். Kamal Haasan: "ஈகையும் வீரமும் இதயத்தில் ஏந்திய நண்பரின் நினைவுகள்" - விஜயகாந்தை புகழ்ந்த நடிகர் கமல் ஹாசன்.!
மிகப்பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கி இருக்கும் 2026 சட்டப்பேரவை தேர்தல்:
இதன் வாயிலாக அதிமுக - பாஜக கூட்டணி முறிவுக்கு, எடப்பாடி பழனிச்சாமியின் சர்ச்சைக்குரிய பேச்சு காரணம் என்பது அண்ணாமலையின் பேச்சால் உறுதியாகி இருக்கிறது. தற்போது தொடர்ந்து 3 வது முறை மத்தியில் பாஜக தலைமையிலான ஆட்சி அமைந்துள்ள நிலையில், தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் பாஜக தலைமையிலான கூட்டணியில் பாமக, புரட்சி பாரதம், ஓ. பன்னீர் செல்வம் அணி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் உட்பட முக்கிய கட்சிகள் இருக்கின்றன. எதிர்வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலிலும் இதே கூட்டணி தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுகவை பொறுத்தமட்டில் தேமுதிக உட்பட சில கட்சிகளுடன் கூட்டணி அமைத்து 2024 மக்களவை தேர்தலை எதிர்கொண்டு, 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கும் தயாராகி வருகிறது.