Transgenders Attacking Lawyer: வழக்கறிஞரை அடித்து தாக்கிய திருநங்கைகள் - மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு..!
ராமநாதபுரத்தில் வழக்கறிஞரை திருநங்கைகள் ஒன்றாக சேர்ந்து அடித்து தாக்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மார்ச் 22, ராமநாதபுரம் (Ramanathapuram News): ராமநாதபுரம் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் முழுமையான வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்பதற்காக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனையடுத்து, நேற்று ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து திருநங்கைகளையும், ராமநாதபுரம் சமூக நலத்துறை சார்பில் நடத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு அழைப்பு விடுத்துள்ளனர். Lorry-Bus Accident: லாரி – அரசு பேருந்து மோதல்; சென்னை-போளூர் தேசிய நான்கு வழி சாலையில் விபத்து..!
மேலும், அதிகாரிகளின் ஆலோசனைப்படி ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, உறுப்பினர் அடையாள அட்டை உள்ளிட்ட சான்றுகளுடன் திருநங்கைகள் அனைவரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். நிகழ்ச்சி தொடங்குவதற்குமுன் திருநங்கைகள் அனைவரும் அங்கே அமர்ந்து பேசிக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது, அங்கே சென்றுகொண்டிருந்த வழக்கறிஞர் ஒருவர் திருநங்கைகளை பார்த்து தவறாக பேசியதாக தெரிகிறது. இதனால், அங்குள்ள திருநங்கைகள் அனைவரும் சேர்ந்து வழக்கறிஞரை அடித்து தாக்கியுள்ளனர். மேலும், திருநங்கைகள் அவரைத் திட்டி கூச்சலிட்டனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் வழக்கறிஞரை தர்மரை மீட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக, தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் திருநங்கைகளை நேரில் அழைத்து விசாரித்துள்ளார். இதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பினார். இதில் காயமடைந்த வழக்கறிஞர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், திருநங்கைகள் வழக்கறிஞரை தாக்கியதால் சிறிது நேரம் அங்கு பதற்றமான சூழல் நிலவியது.