Trichy Friends Died Accident: பேருந்தில் மோதி விபத்திற்குள்ளான கார்; 2 இளம் நண்பர்கள் உடல்நசுங்கி பலி..! பெற்றோருக்கு தெரியாமல் இன்ப பயணம் இறுதி பயணமான சோகம்.!
மகன்கள் வீட்டில் இருக்கிறார்கள் என உறங்கிக்கொண்டு இருந்த பெற்றோரின் காதுகளில் இடியாய் விழுந்த மரண செய்தி குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
ஜனவரி 14, ஏரக்குடி: திருச்சி மாநகரில் உள்ள ஈ.வெ.ரா சாலை (EVR Road, Trichy), கஸ்தூரிபுரம் பகுதியில் வசித்து வருபவர் சுரேஷ். இவரின் மகன் அர்ஜுன் (வயது 20). தென்னூர் 13 வது தெருவில் வசித்து வருபவர் பசீர் அகமது. இவரின் மகன் ஷிமர் அகமத் (வயது 20). இவர்கள் இருவரும் கல்லூரி நண்பர்கள் ஆவார்கள்.
இருவரும் நேற்று இரவில் தங்களது பெற்றோரிடம் கூறாமல் வீட்டில் இருந்து வெளியேறி, காரில் இரவு நேரத்தில் ஊர் சுற்றியுள்ளனர். அதிகாலை 3 மணியளவில் மதுரை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் (Madurai - Trichy Highway) பயணித்துள்ளனர். அப்போது, மணிகண்டம் ஏரக்குடி பகுதியில் வந்தபோது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்துள்ளது.
இதனால் தாறுமாறாக ஓடிய கார், எதிர்திசையில் பாய்ந்து சென்னையில் இருந்து திருநெல்வேலி நோக்கி பயணம் செய்த தனியார் சொகுசு (Car Bus Collision 2 Died on Spot) பேருந்து மீது நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது. அதிவேகத்தில் தறிகெட்டு கார் பாய்ந்த காரணத்தால், காரில் பயணம் செய்த இருவரும் உடல் நசுங்கி பலியாகி இருந்தனர்.
இந்த விபத்தை கண்டு அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகள், மணிகண்டன் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். Kite Festival: தனது தொண்டர்களோடு பட்டம் விட்டு, குழந்தை போல மகிழ்ந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா..!
கார் தறிகெட்டு பாய்ந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து பேருந்து ஓட்டுநர் சுதாரிப்புடன் செயல்பட்டதால், விபத்தில் பேருந்தில் பயணம் செய்தோருக்கு எவ்வித காயமும் இல்லை. விபத்தால் திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து நெரிசலை சந்தித்தது.
இந்த விவகாரத்தில் தனியார் பேருந்து ஓட்டுநராக திருநெல்வேலி பருத்திப்பாடு மறவன்குளம் கிராமத்தை சேர்ந்த குமரன் (வயது 60) என்பவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மாணவர்களின் பெற்றோருக்கு தொடர்பு கொண்டு காவல் துறையினர் விபத்து குறித்து தெரிவித்துள்ளனர்.
முதலில் காவல் துறையினர் கூறுவதை நம்பாத பெற்றோர், மகன்கள் வீட்டில் உறங்கிக்கொண்டு இருக்கிறார்கள் என தெரிவித்துள்ளனர். அதிகாரிகள் கூறுவதை கேட்டு அதிர்ந்தபடி மகன்களை தேடியபோது அவர்கள் இல்லை. அதன்பின்னரே பெற்றோருக்கு மகன்களின் இறப்பு தெரியவந்துள்ளது.
பிள்ளைகள் விபத்தில் பலியாகியுள்ள செய்தியை கேட்டு பதறியபடி திருச்சி அரசு மருத்துவமனைக்கு வந்த பெற்றோர், குழந்தைகளின் உடலை கண்டு நெஞ்சில் அடித்தபடி கதறியழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.