Friends Died: அட்வென்சருக்காக தோழியுடன் அருவிக்கு சென்ற நண்பர்கள் 2 பேர் பலி., ஒருவர் உயிர் ஊசல்.! உயிர்தப்பித்த தோழி.!
புதிய அருவிகளை தேடிச்செல்லும் அன்பர்கள் நீரின் ஆழம் தெரியாமல் காலைவிட்டால் என்ன மாதிரியான சோகம் நிகழும் என்பதற்கு இதுவே சாட்சி.
ஜூன் 17, திருச்சி (Trichy News): நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியை (Ooty, Nilgiris) சேர்ந்த இளைஞர்கள் நிஷாந்த் குமார், தமீம், கோவையை (Coimbatore) சேர்ந்தவர் ஜெஸ்வின். இவர்கள் அனைவரும் யூடியூபில் வரும் விடீயோக்களை பார்த்து, அட்வென்சர் இடங்களை தேடி இருக்கின்றனர்.
அதன்படி, இவர்களுக்கு திருச்சி (Trichy) மாவட்டத்தில் உள்ள பச்சைமலை பெரியமங்கலம் அருவி குறித்து தகவல் கிடைத்துள்ளது. யூடியூபில் அதனை பார்த்து திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியை சேர்ந்த 23 வயது தோழியுடன் காரில் சென்றுள்ளனர்.
வெயிலின் காரணமாக அருவியில் நீர் இன்றி குட்டைபோல தேங்கி இருக்க, அதன் ஆழம் தெரியாமல் ஒருவர் உள்ளே குதித்துள்ளார். குட்டைக்குள் குதித்தவர் அபயக்குரல் எழுப்ப, அதிர்ச்சியடைந்த நிஷாந்த் நீருக்குள் விழுந்தவரை காப்பாற்ற முயற்சித்து அவரும் உள்ளே விழுந்துள்ளார். Nuclear Weapon on Belarus: உக்ரைன் எல்லைக்கு சென்றது ரஷியாவின் அணு ஆயுதம்; ஹிரோஷிமாவை விட 3 மடங்கு பாதிப்பை ஏற்படுத்தும் – அதிர்ச்சி தகவல் உறுதியானது.!
நண்பர்கள் மூவரும் நீரில் விழுந்து தத்தளிக்க, இதனைக்கண்டு அதிர்ந்துபோன தோழி அபயக்குரல் எழுப்பியுள்ளார். இந்த சத்தம் கேட்டு வந்த விவசாயிகள் நிஷாந்த் குமாரை மட்டும் பத்திரமாக மீட்டனர். பிற 2 பேர் குட்டைக்குள் மூழ்கிப்போயினர். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர், பாறை இடுக்கில் சிக்கி உயிரிழந்த பிற இருவரின் உடலை மீட்டனர்.
இந்த சம்பவத்தில் பாறை இடுக்கில் சிக்கிய தமீம் மற்றும் ஜெஸ்வினின் முகம் சிதைக்கப்பட்டு இருந்துள்ளது. இவர்களின் முகத்தை குட்டையில் அடிப்பகுதியில் வசித்து வரும் மீன்களும், நண்டுகளும் சேதப்படுத்தி இருக்கலாம் என்று விவசாயிகள் கூறுகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆழம் தெரியாமல் கால்களை விடாதே..