Lorry Van Crash: வேன் - லாரி நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து; சுற்றுலா பயணிகள் 3 பேர் பலி.. லாரி ஓட்டுனரின் அலட்சியத்தால் சோகம்.!

தேசிய நெடுஞ்சாலையில், தவறான பாதையில் எதிர்திசையில் வந்த வாகன ஒட்டியால் சுற்றுலா வந்த குடும்பத்தினரின் 3 பேர் உயிரிழந்த சோகம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

Thoothukudi Accident (Photo Credit: @ANI X)

டிசம்பர் 31, தூத்துக்குடி (Thoothukudi News): உத்திரப்பிரதேசம் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட 30 பேர், தென் தமிழகத்திற்கு ரயில் மூலம் சுற்றுலா வந்திருக்கின்றனர். இவர்கள் ராமேஸ்வரம் வந்து, பின் அங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சுற்றி பார்க்க இரண்டு தனியார் வேனை வாடகைக்கு எடுத்துள்ளனர்.

லாரி - வேன் மோதி விபத்து: இன்று அதிகாலை தூத்துக்குடி வழியாக கன்னியாகுமரி செல்வதற்கு பயணத்திற்கின்றனர். திருநெல்வேலி - தூத்துக்குடி நெடுஞ்சாலையில், வல்லநாடு பகுதியில் சென்ற போது தவறான பாதையில் எதிர் திசையில் வந்த லாரியின் மீது வேன் மோதி பயங்கரமான விபத்து ஏற்பட்டது.

அதிகாலை நடந்த சோகம்: இந்த விபத்தில் வேன் அருகில் உள்ள பள்ளத்தில் தூக்கி வீசப்பட்டது. அதிகாலை 4 மணி அளவில் இந்த விபத்து நடைபெற்ற நிலையில், ஒரு மணி நேரத்திற்கு பின்னரே காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதி என்பதால், அங்கு எந்த விதமான விபத்துக்கான அடையாளமும் தென்படவில்லை. Brinjal Gravy: சுவையான கத்தரிக்காய் கொத்சு செய்வது எப்படி?.. அசத்தல் டிப்ஸ் இதோ.! 

வடமாநிலத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள்: தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். விபத்தில் உயிரிழந்த 2 பேர் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள சரக்பூர் மாவட்டத்தைச் சார்ந்த சுமன், பார்வதி என்பது தெரியவந்தது. 16 பேர் படுகாயம் அடைந்த நிலையில், அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

காவல் துறையினர் விசாரணை: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரு வயது குழந்தை ஒன்றும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததை தொடர்ந்து, காவல் துறையினர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement