Thirumavalavan about MK Stalin: திமுகவின் முடிவுகளுக்கு விசிக உறுதுணையாக இருக்கும் - முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி, தொல். திருமாவளவன் பேட்டி..!
பெரியாரிய, அம்பேத்கரிய சமூக கட்டமைப்புகளை பாதுகாக்க மு.க ஸ்டாலின் நீடூடி அரசியலில் நெடுங்காலம் வாழ வேண்டும் என திருமாவளவன் பேசினார்.
மார்ச் 01, சென்னை: திமுக தலைவர் (DMK President) & தமிழ்நாடு முதல்வர் (Tamilnadu Chief Minister) மு.க ஸ்டாலின் அவர்களின் 70வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளை திமுகவினர் (DMK) வெகு விமர்சையாக சிறப்பித்து வருகின்றனர். திமுகவின் தொண்டர்கள் மற்றும் கூட்டணிக்கட்சி தலைவர்கள் (DMK Alliance Parties), அரசியல் தலைவர்கள் (Politicians) பலரும் தொடர்ந்து நேரிலும், போனிலும் மு.க ஸ்டாலினுக்கு (M.K Stalin) தொடர்பு கொண்டு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இன்று காலை சென்னையில் (Chennai) உள்ள அண்ணா அறிவாலயத்தில் (Anna Arivalayam) திமுக தலைவர் & முதல்வர் மு.க ஸ்டாலினை கூட்டணிக்கட்சி தலைவரான விடுதலை சிறுத்தைகள் (Viduthalai Chiruthaigal Katchi) கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் நேரில் சந்தித்து தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து, செய்தியாளர்கள் சந்திப்பும் நடைபெற்றது.
இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய விசிக தலைவர் மற்றும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் தொல். திருமாவளவன் (Thol. Thirumavalavan), "திமுக தலைவர், தமிழ்நாடு முதல்வருமான அண்ணன் தளபதி அவர்களின் பிறந்தநாளில் நேரில் சந்தித்து எமது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துள்ளோம். அவர் நீடூடி வாழ வேண்டும். College Student Died:அலட்சியத்துடன் இரயில் தண்டவாளத்தை கடந்த கல்லூரி மாணவி, அதிவிரைவு இரயிலில் அடிபட்டு மரணம்..!
சமூகநீதி, மதச்சார்பின்மையை பாதுகாக்க, அம்பேத்கர், தந்தை பெரியார் போன்ற தலைவர்கள் உருவாக்கி வைத்துள்ள சமூக கட்டமைப்பை பாதுகாக்க அவர் நீடூடி வாழ வேண்டும். தலைமை தாங்க வேண்டும். அவரின் பிறந்தநாளில் மல்லிகார்ஜுன கார்கே, பரூக் அப்துல்லா, அகிலேஷ் & தேஜஸ்வி யாதவ் ஆகியோரும் கலந்துகொள்கிறார்கள்.
பாஜக எதிர்ப்பு சக்திகளை ஒருங்கிணைக்க திமுக முயற்சிக்க வேண்டும் என பலமுறை நாங்கள் திமுகவை வலியுறுத்தி வருகிறோம். திமுக ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைக்க எடுக்கும் முடிவுகளுக்கு விசிக உறுதுணையாக இருக்கும்" என்று கூறினார்.