Bison Kaalamaadan: மாரி செல்வராஜின் திரை மகுடத்தில் மற்றுமொரு வைரக்கல்.. பைசனை வாழ்த்திய முதல்வர் ஸ்டாலின்.!
தமிழக விளையாட்டு வீரரின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுத்த பைசன் திரைப்படம் வெற்றி பெற்று மிளிர்வதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டியுள்ளார். இயக்குனர் மாரி செல்வராஜ் மற்றும் நடிகர் துருவ் விக்ரமை நேரில் அழைத்து முதல்வர் பாராட்டினார்.
அக்டோபர் 27, சென்னை (Chennai News): இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் துருவ் விக்ரம் நடித்து வெளியான திரைப்படம் பைசன். இப்படம் அர்ஜுனா விருது வென்ற தூத்துக்குடியைச் சேர்ந்த கபடி வீரரின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரனும் நடித்துள்ளார். தீபாவளியை முன்னிட்டு கடந்த வாரம் பைசன் படம் வெளியான நிலையில், உலக அளவில் ரூ.35 கோடி வரை வசூலித்து வெற்றி பெற்றது. இந்த நிலையில் இயக்குனர் மாரி செல்வராஜ் மற்றும் துருவ் விக்ரமை நேரில் அழைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டி நன்றி தெரிவித்துள்ளார்.
பைசன் இயக்குனர் மாரி செல்வராஜ் & நடிகர் துருவ் விக்ரமை பாராட்டிய முதல்வர்:
இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், "தன் திறமையை மட்டுமே நம்பி, கிராமத்தில் இருந்து சாதிக்கக் கிளம்பிய ஓர் இளைஞன், கபடிக் கோட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் சந்திக்கும் போராட்டங்களை எதிர்கொண்டு வெற்றி பெற்ற கதையை மிகச் சிறப்பான திரை அனுபவமாக மாற்றியுள்ளார் இயக்குநர் மாரி செல்வராஜ். அவரது ஒவ்வொரு படத்தையும் நான் உன்னிப்பாகக் கவனித்து வருகிறேன். ஒவ்வொன்றும் ஒரு 'sharp message'-ஐயும் தாக்கத்தையும் நம் மனங்களில் பதிக்கத் தவறியதே இல்லை. அவ்வகையில் விளையாட்டுத் துறையை மையமாக வைத்து, இளைஞர்கள் கைக்கொள்ள வேண்டிய பாதையை, அரசியலை மிக முதிர்ச்சியுடன் காட்டியிருக்கிறார் மாரி செல்வராஜ் அவர்கள். Bigg Boss Aadhirai: மக்களை தவறாக விமர்சித்தாரா ஆதிரை?.. பிக் பாஸை விட்டு வெளியேறும்போது உண்மையில் பேசியது என்ன?
பைசன் மிளிர்வதாக பாராட்டு:
சகோதரர் மாரியின் திரைமொழியும், கலைநேர்த்தியும், மேலும் மேலும் மேம்பட்டு வருவதற்கு எடுத்துக்காட்டாக 'பைசன்' மிளிர்கிறது. இத்திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி, மாரியின் திரைக்கதைக்கு உயிரூட்டியுள்ள துருவ் விக்ரம், பசுபதி, அனுபமா, ரஜிஷா உள்ளிட்ட நடிகர்கள், பின்னணியில் உழைத்த தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள்! இதுபோல மேலும் பல படைப்புகளைத் தமிழ்த் திரையுலகுக்கு வழங்க மாரி செல்வராஜ் அவர்களுக்கு எனது வாழ்த்துகள்!" என தெரிவித்துள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் பைசனை பாராட்டி பதிவு:
#BisonKaalamaadan: மாரி செல்வராஜின் திரைமகுடத்தில் மற்றுமொரு வைரக்கல்!
தன் திறமையை மட்டுமே நம்பி, கிராமத்தில் இருந்து சாதிக்கக் கிளம்பிய ஓர் இளைஞன், கபடிக் கோட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் சந்திக்கும் போராட்டங்களை எதிர்கொண்டு வெற்றி பெற்ற கதையை மிகச் சிறப்பான திரை அனுபவமாக… pic.twitter.com/q345pPYkxl
— M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) October 25, 2025
நன்றி தெரிவித்த இயக்குனர் மாரி செல்வராஜ்:
இதனை தொடர்ந்து இயக்குனர் மாரி செல்வராஜ் முதல்வரின் பாராட்டுகளுக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார். இதுகுறித்த அவரது பதில் பதிவில், "என் முதல் படமான பரியேறும் பெருமாளில் ஆரம்பித்து கர்ணன், மாமன்னன், வாழை இப்போது பைசன் வரை என் மீதும், என் படைப்பின் மீதும் பெரும் நம்பிக்கை வைத்து ஆர்வமாய் பார்த்து நேரில் அழைத்து என்னை உச்சிமுகர்ந்து கொண்டாடும் உங்களின் அத்தனை பேரன்பிற்கும், பெரும் பிரியத்திற்கும் என் இதயத்திலிருந்து கசிந்துருகும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் ஐயா" என தெரிவித்துள்ளார்.
முதல்வரின் பாராட்டுக்கு நன்றி தெரிவித்து மாரி செல்வராஜ் பதிவு:
என் முதல் படமான பரியேறும் பெருமாளில் ஆரம்பித்து கர்ணன் மாமன்னன் வாழை இப்போது பைசன் வரை என் மீதும் என் படைப்பின் மீதும் பெரும் நம்பிக்கை வைத்து ஆர்வமாய் பார்த்து நேரில் அழைத்து என்னை உச்சிமுகர்ந்து கொண்டாடும் உங்களின் அத்தனை பேரன்பிற்கும் பெரும் பிரியத்திற்கும் என்… https://t.co/fiePIueOfV
— Mari Selvaraj (@mari_selvaraj) October 25, 2025
(The above story first appeared on LatestLY on Oct 27, 2025 02:33 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

