Women With Died Son: ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை.. 75 ஆண்டுகளாக சாலை இல்லாததால் பலியான உயிர்.!

சுதந்திரம் அடைந்ததில் இருந்து சாலை வசதி இல்லாத மலைக்கிராமத்தில் பிறந்த ஒவ்வொரு உயிரும் ஆபத்தான வேலையில் உயிரை துறக்கிறது.

Vellore Anaikattu Died Children Body Mother Walking 10 KM Issue Visuals

மே 28, அணைக்கட்டு (Anaikattu, Vellore): வேலூர் மாவட்டத்தில் உள்ள அணைக்கட்டு, அல்லேரிமலை அத்தி மரத்தூர் பகுதியை சேர்ந்தவர் விஜய். இவரின் மனைவி பிரியா. தம்பதிகளுக்கு தனுஸ்கா என்ற ஒன்றரை வயது மகள் இருக்கிறார். இவர்கள் நேற்று இரவில் வீட்டில் உறங்கிக்கொண்டு இருந்தார்.

அந்த சமயத்தில், பாம்பு ஒன்று வீட்டில் புகுந்துவிடவே, உறங்கிக்கொண்டிருந்த குழந்தை தனுஷ்காவை பாம்பு தீண்டியுள்ளது. குழந்தையின் அழுகுரல் கேட்டு பெற்றோர் வந்து பார்க்கையில், பாம்பு தீண்டியது தெரியவந்தது. PM Narendra Modi: புதிய நாடாளுமன்றம் ஒவ்வொரு இந்தியர்களின் பெருமை – பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்; முழு பேச்சு விபரம் உள்ளே.!

இதனையடுத்து, குழந்தையை உடனடியாக அணைக்கட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்த நிலையில், சாலை வசதி சரிவர இல்லாததால் மருத்துவமனைக்கு செல்ல தாமதம் ஏற்பட்டது.

இதனால் குழந்தை மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த அணைக்கட்டு காவல் துறையினர், குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்குப்பதிவு செய்தும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

மருத்துவமனையில் காலையில் பிரேத பரிசோதனை நிறைவு பெறவே, குழந்தையின் உடல் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. குழந்தையின் உடலை அவசர ஊர்தி மூலமாக கிராமத்திற்கு எடுத்து செல்லும் முயற்சி நடைபெற்றுள்ளது. Ambati Rayudu: ஐ.பி.எல் தொடரில் இருந்து ஓய்வை அறிவித்தார் அம்பதி ராய்டு.. சி.எஸ்.கே ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி.!

கிராமத்தில் சரிவர சாலை வசதி இல்லாத காரணத்தால் 10 கி.மீ முன்பே அவசர ஊர்தியில் இருந்து குழந்தை மற்றும் அவருடன் வந்தவர்கள் இறக்கி விட்டுள்ளார்கள். இதனால் குழந்தையின் தாய் 10 கி.மீ தூரம் குழந்தையின் உடலை சுமந்தவாறு நடந்து சென்றார்.

அல்லேரி மலைப்பகுதிக்கு சுதந்திரம் அடைந்த நாட்களில் இருந்து சாலை வசதி கேட்டு மக்கள் கோரிக்கை வைத்தவரும் நிலையில், அங்கு உடல்நலம் பாதிக்கப்படுவோரை டோலி கட்டி தூக்கி செல்லும் அவலம் இன்றளவும் தொடருகிறது.