"அரசியல் வீக்கெண்ட் ட்ரிப் இல்ல".. பெரம்பலூரில் விஜய்யை கண்டித்து போஸ்டர்.. பிரச்சாரத்தை ரத்து செய்ததால் கண்டனம்.!
திருச்சி, அரியலூரில் பிரச்சாரம் செய்த தவெக தலைவர் விஜய், நேர தாமதத்தின் காரணமாக பெரம்பலூர் தேர்தல் பிரச்சாரத்தை ரத்து செய்தார். விரைவில் புதிய தேதியில் மக்கள் சந்திப்பு நடைபெறும் என தற்போது தவெக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 14, பெரம்பலூர் (Perambalur News): 2026 சட்டப்பேரவை தேர்தலில் 'உங்க விஜய் உங்களுக்காக வர்றேன்' என்ற முழக்கத்துடன் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தீவிர அரசியலில் களமிறங்கி இருக்கிறார். விழுப்புரம், மதுரையில் முதல் 2 மாநில மாநாடுகளை நடத்தி முடித்த விஜய், நேற்று திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் தேர்தல் பிரச்சார பணிகளிலும் ஈடுபட்டார். பிற அரசியல் கட்சிகளைப்போல அல்லாமல், வாரத்துக்கு ஒருநாள் மட்டும் விஐய் தேர்தல் பிரச்சார பணிகளில் ஈடுபட கட்டுப்பாடுடன் அனுமதி வழங்கப்பட்டது. சுமார் 26க்கும் மேற்பட்ட கட்டுப்பாடுகள் தவெக தொண்டர்களுக்கு விதிக்கப்பட்டது. VK Vijay Campaign Trichy: ஜனநாயக போருக்கு தயார்.. சொன்னீர்களே.. செய்தீர்களா?.. திமுக கோட்டையில் விஜயின் தெறி பேச்சு.. ஆளுங்கட்சிக்கு எதிராக போர் முழக்கம்.! ஸ்தம்பித்துப்போன திருச்சி.!
ஆளுங்கட்சிக்கு எதிராக போர் முழக்கம் :
திருச்சி மரக்கடை பகுதியில் நேற்று காலை 10 மணிக்கு மேல் பிரச்சாரத்தை தொடங்குவதாக தெரிவித்த தவெக தலைவர் விஜய், சாலை மார்க்கமாக இல்லாமல் தனி விமானத்தில் திருச்சி வந்தடைந்தார். தொடர்ந்து, ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட பகுதிகளில் அவர் உரையாற்றினார். விஜயை வரவேற்கவும், அவருக்கு ஆதரவு அளிக்கவும் தவெக தொண்டர்கள் நேற்று காலை முதலாகவே திருச்சி விமான நிலையத்திலும் குவிந்தனர். திருச்சி தமிழகத்தின் மத்திய மண்டலமாக கருதப்படுகிறது. இந்த மையத்தில் இருந்து விஜய் தேர்தல் பிரச்சார பயணத்தை தொடங்கி இருக்கிறார். இதற்காக தவெக பிரச்சார பேருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும் மரக்கடை பகுதியில் பிரச்சார உரையாற்றும்போது திமுகவிற்கு எதிராக 505 தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்துள்ள திமுக அதில் எத்தனை வாக்குறுதிகளை நிறைவேற்றியது? எனவும், சொன்னீர்களே.. செய்தீர்களா? எனவும் கேள்வி எழுப்பி மக்களை தன்வசம் இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
விரைவில் பெரம்பலூரில் பிரச்சாரம் :
இந்நிலையில் தவெக தலைவர் விஜய் திருச்சியிலேயே நீண்ட நேரம் பிரச்சார பயணம் மேற்கொள்ளும் நிலை ஏற்பட்டது. தொண்டர்கள் விஜயின் வருகைக்காக அவரின் பேருந்து வரும் வழித்தடம் முழுவதும் காத்திருந்ததால் 10 மணிக்கு பேருந்தில் ஏறி பிரச்சாரத்திற்கு புறப்பட்ட விஜய் 2:00 மணிக்கு மேல் தான் திருச்சி மரக்கடை பகுதிக்கு சென்றார். அங்கு பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு அரியலூர் புறப்பட்ட நிலையில், இறுதியாக பெரம்பலூர் பிரச்சாரத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் நேர தாமதமானதால் பிரச்சாரத்தை இறுதி கட்டத்தில் ரத்து செய்து அறிவித்த விஜய் விரைவில் மறு தேதி அறிவித்து பெரம்பலூரில் மக்கள் சந்திப்பு நடைபெறும் எனவும் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதனால் பெரம்பலூரில் வருகை தரும் விஜயை காண காத்திருந்த பலரும் ஏமாற்றத்துடன் வீட்டுக்கு திரும்பிச் சென்றனர்.
விஜய்யை கண்டித்து போஸ்டர் :
பெரம்பலூரில் மக்கள் நள்ளிரவு ஒரு மணி வரை காத்திருந்து ஏமாற்றமடைந்த நிலையில், இன்று பெரம்பலூர் நகரில் விஜயை கண்டித்து பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் குறிப்பிட்டுள்ளதாவது, "Bro.. Idhu Political Yatra va.. Ila Unga Weekend Gateway ah.. Bro.. Politics Saturday Party Ila, Adhu 24/7 Duty.. Bro.. Politics na Edho Weekend Movie Release nu Nenaikurar.. Bro.. Arasiyal Weekend Trip Illai.. Full Time Job Bro!" (சகோ.. இது அரசியல் யாத்ரா வா.. இல்ல உங்க வீக்கெண்ட் கேட்வே ஆ.. சகோ.. அரசியல் சாட்டர்டே பார்ட்டி இல்ல, அது 24/7 டியூட்டி.. சகோ.. அரசியல்னா எதோ வீக்கெண்ட் படம் ரிலீஸ்னு நெனைக்குறார்.. சகோ.. அரசியல் வீக்கெண்ட் ட்ரிப் இல்லை.. ஃபுல் டைம் ஜாப்!) என போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய்க்கு கண்டனம் தெரிவித்து ஒட்டப்பட்ட போஸ்டர்கள் :
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)