Construction Issue: தண்ணீரில் கான்கிரீட் கலவையை கொட்டிவிட்ட பணியாளர்கள்.. அல்டரா லெவல் டெக்னீக்கில் செஞ்சி கட்டுமான தொழிலாளர்கள்.!
கட்டுமான பணிகள் நடைபெறும் இடத்தில் தண்ணீரை கூட அகற்றாத பணியாளர்கள், அப்படியே கான்கிரீட் போட்ட சம்பவம் செஞ்சியில் நடந்து வீடியோ வெளியாகியுள்ளது.
ஏப்ரல் 13, செஞ்சி (Viluppuram News): விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சியில் (Gingee, Viluppuram), நகராட்சி நிர்வாகம் சார்பில் சாலை விரிவாக்க மற்றும் நகர்ப்புற மேம்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் செஞ்சியின் பல நகர்ப்பகுதிகளில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று, நகரம் அடுத்தகட்ட முன்நகர்வுக்கு செல்ல தொடங்கியுள்ளது.
சாலையை விரிவாக்கம் செய்வது, கழிவுநீர் கால்வாய் சாக்கடை அமைப்பது தொடர்பான பல பணிகள் நடைபெற்று வரும் நிலையில், நேற்று மற்றும் நேற்று முன்தினம் திருவண்ணாமலை - செஞ்சி சாலையில், செஞ்சி காவல் நிலையம் எதிரில் உள்ள பகுதியில் பள்ளம் பறிக்கப்பட்டு, அங்கு கான்கிரீட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. Menstruations Pads: மாதவிடாய் நாட்களும் – பெண்கள் பயன்படுத்தும் ரசாயன நாப்கின்களின் கொடூரமும்.. எச்சரிக்கை செய்தி உங்களுக்குத்தான்.. அதிர்ச்சியை தரும் நோய்கள்.!
அப்போது, பணியாளர்கள் கழிவுநீர் கால்வாய் பள்ளத்தில் இருந்த நீரை கூட எடுக்காமல், பாதாள சாக்கடையை அமைக்க கான்க்ரீட் கலவையை கட்டுமான பணிகள் நடைபெறும் இடத்தில் ஊற்றியுள்ளனர். இதனை பார்த்த அப்பகுதி மக்களில் சிலர் வீடியோ எடுத்து வெளியிட்டு வைரலாக்கி வருகின்றனர்.