Lovers Day Gift Tragedy: காதலிக்கு லவ்வர்ஸ் டே பரிசு கொடுக்க ஆடு திருடிய காதலன் நண்பரோடு கைது.. கூடா சவகாசம் கம்பி எண்ணும் சோகம்.!
நாம் கொண்ட கண்மூடித்தனமான காதலை திருட்டில் ஈடுபட்டு நிரூபணம் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. நாம் அன்போடு கொடுக்கும் ஒரு சிறிய பொருள் கூட போதுமானது. செலவுக்கு பணம் வேண்டி தேவையில்லாமல் விபரீத முடிவெடுத்தால் என்னவாகும் என்பதை உணர்த்துகிறது இந்த செய்தித்தொகுப்பு.
பிப்ரவரி 13, விழுப்புரம்: காதல் கண்களை மறைக்கும், அதற்கு ஜாதி., மதம்., இனம்., மொழி என்ற பாகுபாடு கிடையாது என காதலை பற்றி சிந்தையில் தோன்றுவதையெல்லாம் கவிதையாக கூறலாம். ஆனால், எதார்த்தத்தில் நமது உண்மையான உழைப்பும், நேர்மையும் மட்டுமே நமக்கு காதல் (Love) என்ற அன்பை ஒருவருக்கொருவர் புரிந்துகொண்ட பரிமாறும் துணையை தரும்.
தன்னால் இயன்ற பொருளை வாங்கி அன்போடு காதலுக்கு (Gift) பரிசாக கொடுக்கும் காலங்கள் என்றோ மலையேறிவிட்டது. இன்றளவில் காதலுக்காக கத்தியை தூக்கும் இளசுகள், அதே காதலியை மகிழ்விக்கிறேன் என பணத்தேவைக்காக எடுக்கும் விபரீத முடிவு, அவர்களை பெரும் வாழ்க்கை மாற்றத்திற்கு சென்றுவிட அடிக்கோலிடுகிறது.
காதலர் தினத்தை (Lovers Day) அனுசரிக்கும் பிப்ரவரி 14 (February 14) அன்று உங்களால் முடிந்த சிறிய பொருளை உங்களின் காதலிக்கு தனித்துவமாக பரிசளியுங்கள். அதுவே உங்களின் மீதான அன்பை அவர்களிடையே அதிகரிக்கும். Fast X Trailer: உலகமே எதிர்பார்த்த Fast X படத்தின் அசத்தல் டிரைலர் உள்ளே.. குடும்பத்தை காப்பாற்ற மீண்டும் ரேஸை கையில் எடுத்த வின் டீசல்.!
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி (Gingee, Viluppuram), மலையரசன்குப்பம் கிராமத்தில் வசித்து வரும் இளைஞர் அரவிந்த் குமார் (வயது 20), கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த மோகன் (வயது 20). இருவரும் கல்லூரி மாணவர்கள் & நண்பர்கள். இப்பக்கத்தில் ரேணுகா என்பவர் ஆடுகளை ஆட்டுப்பட்டியில் வைத்து வளர்த்து வருகிறார்.
இதனிடையே, சம்பவத்தன்று ரேணுகாவின் ஆட்டுப்பட்டியில் இருக்கும் ஆடுகளை பல்சர் வாகனத்தில் சென்ற கல்லூரி (College Studetns) மாணவர்களான மோகன், அரவிந்த் குமார் தூக்கி செல்லவே, ரேணுகா அபயக்குரல் எழுப்பி சத்தமிட்டுள்ளார். இதனைக்கேட்ட ஊர் மக்கள் அவர்களை பிடித்து தர்ம அடி கொடுத்து நொறுக்கினர். பின்னர், கண்டாச்சிபுரம் காவல் துறையினருக்கு (Kandachipuram Police Station) தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அரவிந்த் குமார் பெண் ஒருவரை காதலித்து வரும் நிலையில், அவரின் காதலிக்கு காதலர் தினத்தில் பரிசு (Lovers Day Gift) வழங்க பணம் இல்லாத காரணத்தால் ஆடுகளை திருடி விற்பனை செய்ய முடிவெடுத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது அம்பலமானது. இருவரையும் கைது செய்த காவல் துறையினர், அவர்களின் வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் பிப்ரவரி 13, 2023 07:59 AM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)