Son Tattooed Father's Portrait: தந்தையின் உருவத்தை கையில் பச்சை குத்திய பாசக்கார மகன்.. நெஞ்சை கரையவைக்கும் மகனின் பாசம்..!

காதல், திருமணம் என இருப்பவர்கள் தங்களின் துணையின் மீதான பாசத்தை வெளிப்படுத்த டாட்டூ குத்தி வரும் நிலையில், இயற்கை ஆர்வலர் ஒருவர் தனது கையில் தான் உயிரினும் மேலாக பாசம் வைத்த தந்தையின் உருவத்தை கையில் பச்சை குத்திய நெகிழ்ச்சி நிகழ்வு நடந்துள்ளது.

Clips from Mr,AG Muthukumar (Photo Credit: @ag_muthukumar Instagram)

ஜனவரி 23, இராஜபாளையம்: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இராஜபாளையம் (Rajapalayam, Virudhunagar), சொக்கலிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துக்குமார். இவர் அங்குள்ள அரசு உதவிபெறும் தன்னாட்சி அதிகாரம் பெற்ற பி.ஏ.சி.ஆர் பாலிடெக்னிக் கல்லூரியில் (PACR Polytechnic College, Autonomous Institutuion, Rajpalayam) நூலக மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார்.

தந்தையின் மீது அதிக பாசம் கொண்ட முத்துக்குமார், இராணுவத்திலிருந்து (Army Retired) ஓய்வு பெற்றவர் ஆவார். மேலும், சமூக ஆர்வலரும் (Social Activist & Nature Lover) கூட. Engaged Girl Suicide: அந்த விசயத்திற்கு வற்புறுத்திய தாய்.. திருமணத்திற்கு 10 நாட்கள் முன் பெண் விபரீத முடிவு.. காரணம் இதுதான்..!

அவரின் கிராமத்தில் உள்ள இளைஞர்களை ஒன்றிணைத்து குளங்களை சுத்தம் செய்வது, கருவேலி மரங்களை அகற்றுவது, பிளாஸ்டிக் பொருட்களை வைத்து உட்காரும் மேடை அமைப்பது, மரம் நடுவது என பல சுற்றுச்சூழலுக்கு நன்மை பயக்கும் விசயங்களை செய்து வருகிறார். தினமும் கல்லூரிக்கு வந்து செல்ல மிதிவண்டியையே (Cycling) உபயோகம் செய்து வருகிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Muthu Kumar AG (@ag_muthukumar)

 

அவரது தந்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இயற்கை எய்திவிட்டார். இந்த நிலையில், அவர் தனது தந்தையின் மீதான பாசத்தை வெளிப்படுத்தும் பொருட்டு பல நேரங்களில் அதனை பகிர்ந்து இருப்பார். இந்நிலையில், தனது கைகளில் தந்தையின் புகைப்படத்தை பச்சையாக குத்தி இருக்கிறார். அதுகுறித்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், "இன்று அப்பாவின் நான்காவது ஆண்டு நினைவு நாள். புத்திக்கு புரிந்தது மனதிற்கு தான் புரியவில்லை இறந்தவர்கள் திரும்பி வர மாட்டார்கள் என்று.. நீங்கள் எப்பொழுதும் என்னுடன் தான் இருக்கிறீர்கள் அப்பா" என பதிவிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Muthu Kumar AG (@ag_muthukumar)

 

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் ஜனவரி 23, 2023 09:05 PM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement