Kodaikanal Tragedy: உண்டான காயமெங்கும் தன்னாலே மாறிப்போன மாயமென்ன மொமெண்ட்.. கொடைக்கானலில் மீண்டும் மஞ்சும்மல் பாய்ஸ் சம்பவம்..!

கொடைக்கானலில் டால்பின் நோஸ் மீது நடந்து சென்றபோது 100 அடி பள்ளத்தில் இளைஞர் தவறி விழுந்துள்ளார்.

Kodaikanal Tragedy (Photo Credit: Pixabay)

ஏப்ரல் 01, திண்டுக்கல் (Dindigul): திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு (Kodaikanal) நேற்று தூத்துக்குடியில் இருந்து ஆறு இளைஞர்கள் இருசக்கர வாகனங்களில் வந்துள்ளனர். அங்கிருந்த விடுதியில் தங்கி சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து உள்ளனர். இதனைத் தொடர்ந்து முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றாக உள்ள டால்பின் நோஸ் பகுதிக்கு சென்றுள்ளனர். Thug Life Update: அருள்மொழிவருமன் போனா என்ன.. அதான் அருண் விஜய் இருக்கார்ல.. தக் லைஃப் படத்தின் புதிய அப்டேட்..!

அப்போது அங்கிருந்த பாறையின் நுனிப்பகுதிக்கு சென்ற தன்ராஜ் என்ற 22 வயது இளைஞர் கால் தவறி நூறு அடி பள்ளத்தில் விழுந்தார். இதனைத் தொடர்ந்து உடன் வந்த நண்பர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்த தீயணைப்புத் துறையினர் 100 அடி பள்ளத்தில் இறங்கி படுகாயங்களுடன் கிடந்த இளைஞரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்‌.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement