Instagram Love Affair: இன்ஸ்டாகிராம் காதலால் சோகம்; 2 குழந்தைகளை தவிக்கவிட்டு இளம்பெண் ஓட்டம்.., பரிதவிப்பில் கணவர்..!

சேலத்தில் திருமணமான பெண் ஒருவர் தனது 2 குழந்தைகளையும் விட்டுவிட்டு இன்ஸ்டாகிராம் காதலனுடன் ஓடி தலைமறைவாகியுள்ளார்.

Instagram (Photo Credit: Pixabay)

ஏப்ரல் 23, சேலம் (Salem News): சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் தொளசம்பட்டி அருகே உள்ள கிழக்கூர் பகுதியில் வசித்து வரும் தம்பதி கார்த்தி (வயது 29)-சுதர்சனா (வயது 28). இவர்கள் 10 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துள்ளனர். இத்தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், சுதர்சனா கடந்த சில மாதங்களாகவே இன்ஸ்டாகிராம் செயலியை (Instagram App) அதிகமாக பயன்படுத்தி வந்துள்ளார். இதற்கு அவருடைய கணவர் கார்த்தி மறுத்து கண்டித்துள்ளார். மேலும், இதனை பொருட்படுத்தாமல் சுதர்சனா தொடர்ந்து பயன்படுத்தியுள்ளார். IPL 2024 MI Vs RR Highlights: ராஜஸ்தான் அணி அபார வெற்றி..! ஜெய்ஸ்வால் அதிரடி சதம்..!

இதனையடுத்து, இவர் திடீரென தனது 2 மகன்களையும் விட்டுவிட்டு தலைமறைவாகியுள்ளார். இதனால் பதற்றமடைந்த அவரது கணவர் கார்த்தி, தனது மனைவியை பல இடங்களில் தேடி அலைந்துள்ளார். இவரால் கண்டுபிடிக்க முடியாத சூழ்நிலையில், தொளசம்பட்டி காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், சுதர்சனா இன்ஸ்டாகிராம் காதலனுடன் ஓடி சென்றதை கண்டுப்பிடித்தனர். மேலும் விசாரணையில், மேச்சேரி பகுதியை சேர்ந்த மாதேஷ் என்பவர் தான் இவரை கூட்டிச் சென்றுள்ளது என்பது தெரிய வந்தது. காவல்துறையினர் தலைமறைவாகியுள்ள அவர்கள் இருவரையும் தேடும் முயற்சியில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement