ஏப்ரல் 23, ஜெய்ப்பூர் (Sports News): ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 38-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் (MI Vs RR) அணிகள் மோதின. இந்த ஆட்டம் ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. Google Fired 20 Employees: இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம் நடத்திய 20 பணியாளர்கள் பணிநீக்கம்; கூகுள் தொடர்ந்து கெடுபிடி.!

பின்னர், களமிறங்கிய மும்பை அணி தொடக்கத்தில் சரிவை சந்தித்தது. முன்வரிசை வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆகி வெளியேற, 5-வது விக்கெட்டிற்கு திலக் வர்மா மற்றும் நேகல் வதேரா ஆகியோர் இணைந்து 52 பந்துகளில் 99 ரன்கள் குவித்தனர். இதனால் மும்பை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 179 ரன்களை எட்டியது. மும்பை அணி சார்பில் திலக் வர்மா 65, நேகல் வதேரா 49 ரன்கள் அடித்தனர். ராஜஸ்தான் அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசி 4 ஓவர்களில் 18 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தினார்.

ராஜஸ்தான் அணி 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. அதிரடியாக விளையாடிய தொடக்க ஆட்டகாரர்கள் ஜெய்ஸ்வால் மற்றும் பட்லர் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 74 ரன்களை குவித்தனர். அதிரடி ஆட்டம் காட்டிய ஜெய்ஸ்வால் 60 பந்துகளில் 104 ரன்களை அடித்து சதம் விளாசினார். இவருக்கு உறுதுணையாக இருந்த கேப்டன் சாம்சன் 38 ரன்கள் அடித்தார். ராஜஸ்தான் அணி 18.4 ஓவர்களில் 1 விக்கெட் இழந்து எளிதில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகன் விருதை ராஜஸ்தான் அணி வீரர் சந்தீப் சர்மா பெற்று சென்றார்.