Mexican Congress Alien: 1000 ஆண்டுகள் பழமையான ஏலியனின் சடலம் கண்டெடுப்பு; மக்களுக்கு உண்மையினை அம்பலப்படுத்திய விஞ்ஞானிகள் குழு.!
பூவுலகில் நாம் மட்டுமே வாழவில்லை, நாம் அறியாத பல விஷயங்கள் உள்ளன என்பதை அவ்வப்போது யாரோ ஒருவர் வெளியே கூறினாலும், அவரை இன்று வரை உலகம் ஏமாளியாகவும், கோமாளியாகவும் சித்தரித்துவிடுகிறது.
செப்டம்பர் 13, மெக்சிகோ (Technology News): சர்வதேச அளவில் வானியல் தொடர்பான பல்வேறு ஆய்வுகள் நடந்து வருகின்றன. பூமியை போன்ற வேறொரு பூமி, பால்வழி அண்டத்தை போல பிற பால்வழி அண்டங்கள் மற்றும் அவரில் வாழும் உயிர்கள் என ஆய்வுகள் கற்பனைக்கு எட்டாத அளவு தொடருகின்றன.
பூவுலகில் நாம் மட்டுமே வாழவில்லை, நாம் அறியாத பல விஷயங்கள் உள்ளன என்பதை அவ்வப்போது யாரோ ஒருவர் வெளியே கூறினாலும், அவரை இன்று வரை உலகம் ஏமாளியாகவும், கோமாளியாகவும் சித்தரித்துவிடுகிறது.
திரைமறைவில் ஆய்வுகளை மேற்கொள்ளும் அரசும், மக்களிடம் எழும் சந்தேக கேள்விகளுக்கு விடையளிக்க இயலாது எனபதால், வேற்றுகிரகவாசிகள் தொடர்பான விஷயங்களில் அமைதிகாக்கின்றன. அவை இருப்பதாகவும், மக்களை கடத்தி சென்று மீண்டும் விடுத்ததாக கூற்றுகள் இருப்பினும், அதிகாரபூர்வமாக அவை உறுதி செய்யப்படவில்லை. 6 Airbags Mandatory Rule: கார்களுக்கு 6 ஏர்பேக் விதிமுறை கட்டாயமாக்கப்படுமா?.. மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
கடந்த சில ஆண்டுகளாகவே அமெரிக்காவை சேர்ந்த முன்னாள் விமானப்படை அதிகாரி, விஞ்ஞானிகள் சிலர் ஏலியன் தொடர்பான விவகாரங்கள் உண்மையே, அமெரிக்கா பறக்கும் தட்டு மற்றும் அதில் சடலமாக மீட்கப்பட்ட ஏலியன் குறித்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது என்றும் பகிரங்கமாக பேசி பரபரப்பை உண்டாக்கி வருகின்றனர்.
இன்னும் சிலரோ திரைப்படங்களில் காண்பிக்கப்பட்டதை போல ஏலியன்கள் கெட்டவர்கள் இல்லை, அவர்களே நமக்கு எதிர்கால தொழில்நுட்பத்தை வழங்கப்போகிறார்கள் என்றும் கூறுகின்றனர். ஆனால், இன்று வரை வேற்றுகிரகவாசிகள் குறித்த விஷயத்தில் மர்மம் நீடிக்கிறது.
மறைந்த பல்கெரிய எதிர்கால கணிப்பாளர் என வருணிக்கப்படும் பாபா இவாங்கவும், நடப்பு ஆண்டில் ஏலியன்கள் உண்மைத்தன்மை தொடர்பான தகவல் வெளியாகும். அவர்களுடன் நமக்கு அறிமுகம் ஏற்படும். அவர்கள் தங்களை வெளிப்படையாக பிரகடனம் செய்வார்கள் என தெரிவித்து இருந்தார். Actor Ashok Selvan Wedding: அசோக் செல்வன்- கீர்த்தி பாண்டியன் ‘டும் டும் டும்’ முடிந்தது: சமூக வலைதளங்களில் பிரபலங்கள் வாழ்த்து.!
இந்நிலையில், பெரு நாட்டில் உள்ள குஸ்கோ நகரில் இருந்து பெறப்பட்ட இரண்டு சிறிய அளவிலான வேற்றுகிரகவாசிகள் சடலங்கள் மெக்சிகோவில் அமெரிக்கா மற்றும் மெக்சிகோ அதிகாரிகள் முன்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் முன்னாள் அமெரிக்கா விமானப்படை அதிகாரிகள் உட்பட பலரும் இருந்தனர்.
சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தில் மண்ணில் புதைந்ததாக கருதப்படும் ஏலியன் உடல் அங்கு காட்சிப்படுத்தப்பட்டது. அவ்வுடலை ஆய்வு செய்கையில், அது பூமியில் இருக்கும் எந்தவொரு உயிரினத்துடனும் தொடர்பில்லாது இருந்துள்ளது. மேற்படி ஆய்வுகள் நடந்து வருகின்றன.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)