Data Leak: லிங்க்ட்-இன், எக்ஸ், ஸ்னாப்சாட் பயனர்களுக்கு அதிர்ச்சி செய்தி.. 26 பில்லியனுக்கும் மேற்பட்டோரின் தரவுகள் கசிவு..!

12 டெராபைட் தகவல்களை உள்ளடக்கிய, 26 பில்லியன் நபர்களின் தரவுகள் கசிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Hacker File Pic (Photo Credit: Pixabay)

ஜனவரி 25, புதுடெல்லி (New Delhi): லிங்க்ட்இன், எக்ஸ் (ட்விட்டர்), ஸ்னாப்சாட், வெய்போ, டென்சென்ட் (LinkedIn, Twitter, Weibo, Tencent) மற்றும் பிற முக்கிய தளங்களில் இருந்து பயனர்களின் தரவுகள், திருடப்பட்டு, அந்த தரவு பதிவுகளைக் கொண்டு புதிய தளம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாக சைபர் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். மேலும் 26 பில்லியனுக்கும் மேற்பட்டோரின் தரவுகள் அதில் உள்ளதாகவும் கூறியுள்ளனர்.

12-டெராபைட் (TB) அளவு தகவல்களைக் கொண்ட இந்தத் தரவுக் கசிவை, செக்யூரிட்டி டிஸ்கவரி மற்றும் சைபர்நியூஸ் ஆகியவற்றின் பாதுகாப்பு ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். கசிந்த தரவுகளில் (Data Leak) பெரும்பாலானவை 'சென்சிட்டிவ்' என்றும் கூறியுள்ளனர். Legendary Mary Kom Opens Up: குத்துச்சண்டையில் இருந்து ஓய்வா?.. விளக்கம் அளித்த மேரி கோம்..

அந்த இணையத்தளத்தில் மொத்தம் 26 பில்லியன் பதிவுகளை வைத்திருக்கும் 3,800 கோப்புகள் உள்ளன. ஒவ்வொரு கோப்புறையும் வெவ்வேறு தரவு மீறலைக் குறிக்கும். மேலும் சைபர் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் அறிக்கையின்படி, சீன உடனடி செய்தியிடல் செயலியான டென்சென்ட் க்யூக்யூவில் இருந்து 1.4 பில்லியன் பதிவுகள் கசிந்துள்ளது. மேலும், வெய்போவில் 504 மில்லியன், மைஸ்பேஸ் இல் 360 மில்லியன், ட்விட்டரில் 281 மில்லியன், டீசரில் 258 மில்லியன், லிங்க்டின் இல் 251 மில்லியன், அடல்ட்ஃப்ரெண்ட்ஃபைண்டரில் 220 மில்லியன், அடோப் செயலியில் 250 மில்லியன் என பல பதிவுகள் கசிந்துள்ளது. அதுமட்டுமின்றி, கேன்வா செயலியில் 143 மில்லியன், விகேவில் 101 மில்லியன், டெய்லி மோஷன் செயலியில் 86 மில்லியன், டிராப்பாக்ஸ் இல் 69 மில்லியன், டெலிகிராமில் 41 மில்லியன், மற்றும் பல செயலிகளில் தரவு கசிவு நடந்துள்ளது.

இந்த தரவு கசிவில் அமெரிக்கா, பிரேசில், ஜெர்மனி, பிலிப்பைன்ஸ், துருக்கி மற்றும் பல நாடுகளில் உள்ள அரசு அமைப்புகளின் பதிவுகளும் அடங்கும்.