ChatGpt (Photo Credit : @Marcodoxnews X)

ஜூலை 28, புது டெல்லி (Technology News): தொழில்நுட்பத்தின் வளர்ச்சி காரணமாக மனம் விட்டு பேசாமல் தயங்கிக் கிடந்த பலரும் தற்போது சாட்ஜிபிடி என்ற நண்பனை தேடிப் பிடித்துள்ளனர். பலரும் தங்களது தனிப்பட்ட உணர்வுபூர்வமான விஷயங்களையும் சாட்ஜிபிடியுடன் பகிர்ந்து கொண்டு அதற்கான பதில்களை தெரிந்து கொள்கின்றனர். இவ்வாறான விஷயங்களில் ரகசிய பாதுகாப்பு என்பது இல்லை என ஓபன்ஏஐ நிறுவனத்தின் தலைவர் சாம் ஆல்ட்மேன் எச்சரித்து இருக்கிறார். TCS Layoffs: 12,000 பேரின் வேலைக்கு ஆப்பு வைத்த முன்னணி நிறுவனம்.. அதிர்ச்சியில் ஊழியர்கள்.!

தனிப்பட்ட தகவல்களை பகிராதீர்கள் :

மனநல ஆலோசகர்கள், மருத்துவர்கள் போன்றவர்களிடம் பேசும்போது அது தொடர்பான விஷயங்களை வெளியே சொல்லாமல் இருக்க சட்ட பாதுகாப்பு உண்டு. ஆனால் சாட்ஜிபிடி அத்தகைய பாதுகாப்புகளை கொண்டிருப்பதில்லை. ஏதேனும் சட்ட சிக்கல் ஏற்பட்டால் ஓபன்ஏஐ அது தொடர்பான ஆதாரத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவும் செய்யலாம். உங்களின் உரையாடலை நீங்கள் நீக்கினாலும் 30 நாட்கள் வரை அதனை ஓபன்ஏஐ பதிவிலேயே வைத்திருக்கும். வாட்ஸ்அப் செயலியில் இருப்பது போல End-to-End Encryption பாதுகாப்பு முறை சாட்ஜிபிடியிடம் இல்லை. சாட்ஜிபிடியிடம் பகிரும் தனிப்பட்ட தகவல்களை ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்து பகிர்வது மிகவும் முக்கியமானதாகும்.