Sydney Haveli Restaurant (Photo Credit: @VoteLewko X)

செப்டம்பர் 16, சிட்னி (World News): ஆஸ்திரேலியாவின் சிட்டினியில் (Sydney) வடமேற்கு ரிவர்ஸ்டோன் புறநகரில் ஹவேலி உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதனை இந்தியரான ரேஷம்சிங் என்பவர் நடத்தி வருகின்றார். இந்நிலையில், இன்று (செப்டம்பர் 16) காலை 9.15 மணியளவில் விஷவாயு கசிவால் ஒருவர் உயிரிழந்தார். மேலும், 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். Earthquake in Russia: ரஷ்யாவில் பயங்கர நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை விடுப்பு.!

விஷவாயு தாக்கி பலி:

இதுகுறித்த தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மற்றும் மீட்புப் படை அதிகாரிகள், மீட்பு பணியில் ஈடுபட்டனர். அதில், உணவகத்தில் துப்புரவுப் பணியாளரான 25 வயதுடைய நபர் உயிரிழந்தார். குறைந்தது 5 காவல்துறை அதிகாரிகளும், மேலும் 2 பேரும் மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக உதவி கண்காணிப்பாளர் ஆடம் டியூபெரி தெரிவித்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.