Planet Alignment: மக்களே நேற்று வானில் நடந்த அதிசயத்தை பார்க்க மறந்துடீங்களா??.. இதே உங்களுக்காக பிரத்தியேக வீடியோ.!
நட்சத்திர திரள்களின் எண்ணிக்கையை போல பல எண்ணிலடங்கா கேள்விகள் உண்டு. அவற்றுக்கு இன்று வரை சரியான விடை இல்லை. தீர்மானமே முடிவுகளாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
மார்ச் 29, புதுடெல்லி: பல மாயங்கள் நிறைந்த விண்வெளியில் (Space) அவ்வப்போது சூரியகுடும்பத்தில் (Solar System) இருக்கும் கோள்கள் நேர்கோட்டில் சந்தித்துக்கொள்ளும் அதிசயிக்கத்தக்க நிகழ்வும் நடைபெறும். கடந்த 2022ல் புதன், சனி, வியாழன், செவ்வாய், நெப்டியூன் (Planet Alignment) கோள்கள் நேரில் சந்தித்துக்கொண்டன. கடந்த பிப்ரவரி மாதத்தில் வெள்ளி, வியாழன் கிரகங்கள் நெருங்கி வந்தது.
இந்த நிலையில், மார்ச் மாதம் 28ம் தேதியான நேற்று புதன், வியாழன், செவ்வாய், வெள்ளி, யுரேனஸ் (Jupiter, Mercury, Venus, Uranus and Mars) கோள்கள் பூமிக்கு அருகே தோன்றும் நிகழ்வு நடந்தன. இதனை உலகளவில் உள்ள மக்கள் அனைவரும் ஆச்சரியத்துடன் கண்டுகளித்து ரசித்தனர். சில இடங்கள் வெறுமையான கண்களிலும் பார்த்துள்ளனர். Police Died Accident: மழைக்கு மரத்தடியில் ஒதுங்கிய போது நேர்ந்த சோகம்; அரசு பேருந்து மோதி காவலர் பரிதாப பலி.!
நேற்று இரவு வானில் சந்திரனுக்கு கீழ்புறம் பிரகாசமாக தோன்றிய கோள்கள் நேர்கோட்டில் இருப்பதை போல தோன்றித்தலும், அவை வில்போன்ற வளைந்த அமைப்புடன் இருக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.இவை பூமியில் இருந்து பார்க்க வில் அமைப்பு போல தோன்றும். மார்ச் 28ம் தேதியான நேற்று இரவில் சூரிய அஸ்தமனத்திற்கு பின்னர் மக்கள் 5 கோள்களையும் கண்டுகளித்தனர்.