Emergency SOS via Satellite: ஆப்பிள் ஐபோன் பயனர்களுக்கு நல்ல செய்தி.. சாட்லைட் உதவியுடன் அவசரகாலத்தில் அழைப்புகள் மேற்கொள்ள வசதி அறிமுகம்.!
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 14, 15, 16 ஆகிய ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தும் பயனர்கள், தங்களின் அவசரகாலத்தில் அழைப்புகள் மேற்கொள்ள இனி செயற்கைகோள் உதவி செய்யும்.
நவம்பர் 15, சான் பிரான்சிஸ்கோ (Technology News): சர்வதேச அளவில் ஆப்பிள் நிறுவுனத்தின் ஸ்மார்ட்போன் தனிப்பட்ட தகவல் பாதுகாப்பு காரணமாக, பெருநிறுவனங்கள் மற்றும் தொழிலதிபர்களினால் தேர்வு செய்யப்படும் ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக இருக்கிறது.
அதேபோல, ஆப்பிள் நிறுவனத்தின் தொழில்நுட்பத்தின் வழியே, நமது உடல்நலன் கண்காணிக்கப்பட்டு, அவசரகாலத்தில் அவை பல உயிரை காப்பற்றி இருக்கின்றன. இந்நிலையில், ஆப்பிள் நிறுவனத்தின் 14 சீரிஸ் ஸ்மார்ட்போனை பயன்படுத்துவோருக்கு சிறப்பு அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
அதாவது, ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 14, 15, 16 ஆகிய ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தும் பயனர்கள், தங்களின் அவசரகாலத்தில் தானியங்காக அவசர அழைப்புகளை பெறுவதற்கு நெட்ஒர்க் அல்லது ஃவை-பை டேட்டா அவசியம் என்ற நிலை இருந்தது. North Korea Solid Fuel Missile: திட எரிபொருள் கொண்டு இயங்கும் ஏவுகணையை சோதித்தது வடகொரியா: முதற்கட்ட வெற்றி கிடைத்ததாக அறிவிப்பு.!
இதனை செயற்கைகோள் உதவியுடன் கண்காணித்து, அவசரகாலத்தில் நெட்ஒர்க் மற்றும் ஃவை-பை சேவை இல்லாமலேயே அவசர அழைப்புகளை மேற்கொள்ளவும், இருப்பிடத்தை பகிரவும் வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவை தற்போதைய சூழலில் அமெரிக்கா மற்றும் கனடாவில் மட்டுமே அமல்படுத்தப்பட்டுள்ளது.
விரைவில் இவை பிற நாடுகளிலும் அமல்படுத்தப்படும். iOS 17 இயங்குதளம் (OS) கொண்ட பயனர்கள் தங்களின் iPhone 15, iPhone 15 Plus, iPhone 15 Pro, iPhone 15 Pro Max, iPhone 14, iPhone 14 Plus, iPhone 14 Pro, or iPhone 14 Pro Max ஆகிய ஸ்மார்ட்போன்களில் இச்சேவையை பெறலாம் என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.