Solid Fuel Missile (Photo Credit: @Reuters X)

நவம்பர் 15, சியோல் (World News): சர்வாதிகார ஆட்சி நடைபெறும் வடகொரியாவில், என்ன நடைபெறுகிறது? என்பது இன்று வரை தெரியவில்லை. அந்நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன், இராணுவத்தை மேம்படுத்த தொடர்ந்து தனது உத்தரவை பிறப்பித்து வருகிறார்.

இதனால் கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள், அணுஆயுதங்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அரசின் மூலதனம் அனைத்தும் இராணுவத்திற்கு ஒதுக்கப்படுவதால், அத்தியாவசிய தேவைகளுக்கு கூட மக்கள் பல தவிப்புகளுக்கு உள்ளாகி வருகின்றனர்.

அதேபோல, அவ்வப்போது தனது ஆட்சிக்கு எதிராக செய்லபடும் நபர்கள், அரசின் உத்தரவை மீறும் நபர்களுக்கு கடும் தண்டனையும் விதிக்கப்படுகிறது. கடந்த சில வருடங்களாக மேற்கொண்ட ஆய்வுகளின் வெற்றி காரணமாக, கண்டம்விட்டுகண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணைகளையும் தயாரித்து வைத்துள்ளது. DMK Bike Rally: 13 நாட்களில் 234 தொகுதியிலும் மக்களை சந்திக்கும் திமுக; இருசக்கர வாகன பேரணியை தொடங்கிவைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.! 

ஆண்டுக்கு ஒருமுறை இவை அந்நாட்டு மக்கள் முன்னிலையிலும் காட்சிப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், வடகொரியா திட எரிபொருள் கொண்டு இயங்கும் கண்டம்விட்டுகண்டம் பாயும் (Intermediate-Range Ballistic Missile IRBM) ஏவுகணையை சோதனை செய்துள்ளது.

இந்த சோதனையில் முதல் மற்றும் இரண்டாம் தரநிலைகள் வெற்றிகரமாக நிறைவுபெற்றுள்ளது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையில் வடகொரியா புதிய மைல்கல்லை எட்டியுள்ளதாகவும் அந்நாட்டு அரசு ஊடகங்கள் ஒளிபரப்பு செய்துள்ளன.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரஷிய பயணம் மேற்கொண்டு இருந்த வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை நேரில் சந்தித்து பேசினார். இருநாட்டு தலைவர்களும் தனது இராணுவ விவகார பகிர்வு தொடர்பாக வெளியுலகுக்கு அறிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.