iPhone 15 Pro: இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆப்பிள் ஐபோன் 15 ப்ரோ விற்பனை தேதி அறிவிப்பு; ஆப்பிள் பிரியர்களே தயாராகுங்க.!
மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலமாக ஆப்பிள் ஐபோன் 15 இந்தியாவில் தயாரிக்கப்பட்டு தற்போது விற்பனைக்கு தயாராகியுள்ளது.
செப்டம்பர் 20, புதுடெல்லி (Technology News): ஆப்பிள் ஸ்மார்ட் போன் (Apple iPhone) விரும்பிகளுக்கான அட்டகாசமான செய்தியாக செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி, அதாவது நாளை மறுநாள் ஆப்பிள் ஐபோன் 15 மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.
மேக் இன் இந்தியா (Make in India) திட்டத்தின் மூலமாக ஆப்பிள் ஐபோன் 15 இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஸ்மார்ட் போன் ஆகும். இந்த ஸ்மார்ட் போன் தொழில்நுட்பத் துறையில் மிகப்பெரிய மாற்றத்தை எதிர்காலத்தில் ஏற்படுத்தும் என்றும் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆப்பிள் ஐபோன் 15 ஸ்மார்ட் (Apple iPhone 15 Series) போன் செப்டம்பர் 22 ஆம் தேதி ஆப்பிளுக்கு சொந்தமான மும்பை மற்றும் டெல்லி அலுவலகங்களில் மட்டுமே விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுகிறது. அதேபோல, இணைய வழியிலும் ஆப்பிள் வலைதளத்தில் இதனை முன்பதிவு செய்யலாம். TN Weather Update: செப் 21ல் பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.! விபரம் இதோ.!
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் பாக்ஸ்கான் நிறுவனத்தில் தயார் செய்யப்பட்ட ஆப்பிள் ஐபோன் 15 மற்றும் 15 பிளஸ், மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலமாக தேசிய அளவில் தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஆண்ட்ராய்டு செல்போனுக்கு மாற்றாக ஆப்பிள் நிறுவனத்தின் செல்போனும் விற்பனைக்கு தற்போது அறிமுகமாகி உள்ளது. பழைய ஐபோன் 11, 12, 13 ஸ்மார்ட்போன்களை தவிர்த்து புதிய தொழில்நுட்பத்தின் மூலமாக தயாரிக்கப்பட்டுள்ள ஐபோன் 15 மிகப்பெரிய விற்பனை சந்தையை பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பயனர்கள் ஆப்பிள் ஐபோன் 15 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் ரக செல்போனை தேர்ந்தெடுத்தால் ரூபாய் 6 ஆயிரம் வரை பணம் சேமிக்கும் வசதியும், ஐபோன் 14 மற்றும் 15 பிளஸ் ஆகியவற்றுக்கு ரூபாய் 5000, ரூபாய் 4000 என பணத்தை சேமிக்கும் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.