Chennai Rains Cloud (Photo Credit: Twitter)

செப்டம்பர் 20, சென்னை (Weather Update Tamilnadu): சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக 21 ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி-மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் மலைப்பகுதி, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது.

22 ஆம் தேதியில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி-மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தில் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி, நாமக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. Jawan Collection Worldwide: ரூ.907 கோடி வசூல் செய்து மாபெரும் சாதனை செய்துள்ள அட்லீயின் ஜவான் திரைப்படம்..! 

Regional Meteorological Centre, Chennai (Photo Credit: Wikipedia)

23 மற்றும் 24 ஆம் தேதியை பொறுத்தமட்டில் தமிழ்நாடு, புதுச்சேரி-காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 25 மற்றும் 26 ஆம் தேதியை பொறுத்தவரையில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யலாம்.

அதிகபட்ச வெப்பநிலையாக 35 டிகிரி செல்சியஸும், குறைந்தபட்ச வெப்ப நிலையாக 27 டிகிரி செல்சியசும் பதிவாகலாம். வங்கக்கடல் பகுதிகளுக்கு 21 ஆம் தேதியில் மீனவர்கள் செல்ல வேண்டாம். வடக்கு ஆந்திர கடலோரப்பகுதி, அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 கிலோ மீட்டர் முதல் 45 கிலோமீட்டர் வேகம் வரை வீசக்கூடும். இதனால் மீனவர்கள் இப்பகுதிக்கு செல்ல வேண்டாம்" என்று எச்சரிக்கப்படுகிறது.