Apple iPhone 15: ஆப்பிள் ஐபோன் 15 ஸ்மார்ட்போன் விற்பனை சரிவு; சீனாவில் ஆப்பிளுக்கு ஏற்பட்ட திடீர் பின்னடைவு.!
ஐபோன் 14 மாடலை விட 15 மாடல் விற்பனை என்பது சீனாவில் குறைந்துள்ளதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.
அக்டோபர் 17, ஹாங்காங் (Technology News): சர்வதேச அளவில் ஸ்மார்ட் போன் விற்பனையில் ஆப்பிள் ஐபோன் (Apple iPhone) எப்போதும் உச்சத்தில் தான் இருக்கும். அந்நிறுவனத்தின் தரமான தயாரிப்பு, தனிநபர் பாதுகாப்பு உட்பட பல்வேறு சிறப்பு அம்சங்கள் காரணமாக பலரும் ஐபோனை விரும்புவார்கள்.
தற்போது ஆப்பிள் ஐபோன் நிறுவனத்தின் 15வது சீரியஸ் (iPhone 15) மாடல், கடந்த 15 நாட்களுக்கு முன்னதாக சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. அங்கு ஐபோன் 15 மாடல் நல்ல வரவேற்பு பெரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஐபோன் 14 (Apple iPhone 14) மாடலை விட 10 விழுக்காடு குறைவான விற்பனை நடந்துள்ளது. Zomato Marketing: மாடல் அழகியை குட்டை டவுசருடன் வீதிகளில் உலாவவிட்டு விளம்பரம்; ஜோமோட்டோவின் வேறலெவல் மார்க்கெட்டிங் யுக்தி.!
இருப்பினும், இது நல்ல வரவேற்பு என்று தெரிவித்துள்ள ஆப்பிள் நிறுவனம், மக்கள் ஆப்பிள் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் (iPhone 15 Pro Max) ஸ்மார்ட் போனை எதிர்பார்ப்பதை உறுதி செய்துள்ளது. இதனையடுத்து, ஐபோன் 15 புரோமேக்ஸ் ஸ்மார்ட் போன் விற்பனையை அங்கு முன்னெடுக்க திட்டமிட்டுள்ளது.
ஆப்பிள் ஸ்மார்ட் போனில் ஐபோன் 15 ரக ஸ்மார்ட்போன் வட அமெரிக்காவில் பெருமளவு மக்களால் விரும்பி வாங்கப்பட்டுள்ளது. ஐபோன் 12, 11 பயனாளர்கள் தற்போது அந்த ஸ்மார்ட்போனுக்கு மாற்றாக ஆப்பிள் 15-ஐ உபயோகம் செய்ய தொடங்கியுள்ளனர்.