IPL Auction 2025 Live

AI Drone Killed Human: சோதனையில் மனிதரை கண்மூடித்தனமாக இரக்கமின்றி கொன்ற செயற்கை நுண்ணறிவு டிரோன்.. உத்தரவை மீறத்துடிக்கும் AI..!

அமெரிக்க விமானப்படை சார்பில் நடைபெற்று வரும் சோதனையில், AI திறன் கொண்ட இயந்திரம் தனது ஆபரேட்டரை கொலை செய்த தகவல் தெரியவந்துள்ளது.

AI Drone (Photo Credit: US Air Force)

ஜூன் 02, அமெரிக்கா (Technology News): தொழில்நுட்பம் வளர்ந்து வருவதை அடுத்து, அதனால் பல கண்டுபிடிப்புகள் தொடர்ந்து அறிமுகம் செய்யப்படுகிறது. மனிதர்களின் உணர்வை புரிந்துகொண்ட, அவர்களுக்கு உதவி செய்யும் வகையில் பல்வேறு வகையான தானியங்கு செயற்கை நுண்ணறிவு கொண்ட (Artificial Intelligence) இயந்திரங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. இவற்றால் மென்பொருள் நிறுவனங்கள் சமீபத்தில் தங்களின் வேலையாட்கள் குறைப்பு தொடர்பான விஷயத்தையும் மேற்கொண்டன.

இந்த நிலையில், அமெரிக்காவில் விமானப்படை (USAF) சார்பில் நடைபெற்ற டிரோன் AI பயிற்சியில், AI தொழில்நுட்பம் கொண்ட டிரோன் தனது ஆபரேட்டரை கொலை செய்துள்ளது. பயிற்சியின் போது பொம்மை மீது டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது அதிர்ச்சிகரமான வகையில் அமைந்துள்ளது. நல்ல வேலையாக மனிதர்களுக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படவில்லை. Baby Girl Dies in Hot Car: 3 மணிநேரம் மூச்சுத்திணறி பலியான 11 வயது குழந்தை.. காருக்குள் பூட்டிவைத்து சென்ற பெற்றோரால் சோகம்.!

செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட டிரோன், ஒருகட்டத்தில் தனது பயிற்சியாளரின் உத்தரவுக்கு கீழ் படிய மறுத்து கொலையை செய்துள்ளது. அது தானியங்காக செயல்படவும் முயற்சித்து இருக்கிறது என்பது சோதனையில் அம்பலமாகியுள்ளது. இந்த நடைமுறைகள் அதன் பயிற்சியின் போதே கண்டறியப்பட்டுள்ளதால், அவற்றை சரி செய்ய அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனர்.

ஆனால், AI டிரோன் தொடர்பான விவகாரத்தில் மறுப்பு தெரிவிக்கும் அமெரிக்க விமானப்படை, அது தொடர்பான கூற்றுகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ளது. எதிர்காலத்தில் தொடர்ந்து AI விவகாரத்தில் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு பிரச்சனைகள் சரி செய்யப்படலாம் என எதிர்பார்க்கபடுகிறது. ஆனால், அவை சரி செய்யப்படாத பட்சத்தில் அர்னால்டுவின் Terminator படத்தை போல தான் இறுதி தீர்ப்பு எழுதப்படலாம்.