Best Upcoming Phones In October 2025: விவோ, ஒன் ப்ளஸ், ஒப்போ.. அக்டோபரில் களமிறங்கும் சிறந்த ஸ்மார்ட்போன்கள்.. விபரம் இதோ.!

ஒன்ப்ளஸ் 15 (OnePlus 15), விவோ எக்ஸ் 300 (Vivo X 300), ஒப்போ பைண்ட் எக்ஸ்9 ப்ரோ (Oppo Find X9 Pro) என பல ஸ்மார்ட்போன்கள் அக்டோபர் மாதம் (Upcoming Phones In October 2025) அறிமுகமாகிறது. அதன் விபரங்களை லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தில் விரிவாக தெரிந்துகொள்ளலாம்.

Best Upcoming Phones In October 2025 (Photo Credit: @SuperSaf / @Carlos_Vassan / @encoword X)

அக்டோபர் 01, புதுடெல்லி (Technology News): ஆன்மீக செயல்பாடுகளுக்கு பிரபலமான அக்டோபர் மற்றும் செப்டம்பர் மாதங்களில் ஸ்மார்ட்போன் விற்பனை நிறுவனங்களும் தங்களது வாடிக்கையாளர்களுக்காக புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்கிறது. அந்த வகையில், ஓப்போ, விவோ, ஐக்யூ, ஒன் பிளஸ் ஸ்மார்ட் ஃபோன்கள் அக்டோபர் மற்றும் செப்டம்பர் மாதங்களில் புதிதாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளன.

ஒன் பிளஸ் 15 (One Plus 15 Smartphone):

அந்த வகையில், அக்டோபர் மாதம் ஒன் பிளஸ் 15 ஸ்மார்ட்போன் சந்தையில் களம் இறக்கப்படுகிறது. சீன நிறுவனத்தின் தயாரிப்பான Oneplus 15 குவால்கம் Snapdragon 8 எலைட் ஜென் 5 பிராசசர், 12 ஜிபி ரேம், 256 GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் வசதியுடன் அறிமுகமாகிறது. முன்பக்கம் மூன்று கேமரா 50 MB சென்சார், 6.78 இன்ச் எல்டிபிஓஎல்இடி டிஸ்ப்ளே, 165 ரீஃப்ரஷ் ரேட், ஏழாயிரம் எம்ஏஹச் பேட்டரி திறன், 120 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியும் கொடுக்கப்படுகிறது. Export WhatsApp Chats to Arattai App: வாட்ஸ்அப் உரையாடல்களை அரட்டை செயலிக்கு மாற்றுவது எப்படி?.. ஈஸி டிப்ஸ்.. நோட் பண்ணிக்கோங்க.! 

விவோ எக்ஸ் 300 ப்ரோ (Vivo X 300 Pro):

விவோ எக்ஸ் 300 ப்ரோ இந்திய சந்தையில் அக்டோபர் மாதம் 13ஆம் தேதி விற்பனையை தொடங்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மீடியா டெக் டைமண்ட் சிட்டி 9,500 ப்ராசசர், 12 ஜிபி ரேம், 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வசதியுடன் அறிமுகமாகிறது. 200 MP பெரிஸ்கோப் கேமரா உட்பட பல அம்சங்களும் இணைக்கப்பட்டுள்ளன.

ஒப்போ பைண்ட் எக்ஸ்9 அல்ட்ரா (Oppo Find X9 Ultra):

ஓப்போ பைண்ட் எக்ஸ்9 அல்ட்ரா அக்டோபர் மாதம் 16ஆம் தேதி இந்திய சந்தையில் களமிறங்குகிறது. Oppo நிறுவனத்தின் Oppo Find X9 அல்ட்ரா ஸ்மார்ட்போன் மீடியா டெக் டைமன்சிட்டி 9,500 பிராசஸரில் இயங்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. 12 ஜிபி ரேம் 256 GB இன்டர்நெட் ஸ்டோரேஜ் 200 MB ட்ரிபிள் கேமரா, டெலி போட்டோ ஷூட்டர் என பல வசதிகள் இதில் உள்ளன. ஆண்ட்ராய்டு 16 OS மற்றும் கலர் ஓஎஸ் இணைந்து இந்த ஸ்மார்ட் போனை வழங்குகிறது. சர்வதேச சந்தையிலும் இந்த ஸ்மார்ட் போன் களமிறங்குகிறது.

ஐக்யூஓஓ 15 (IQOO 15):

இந்தியாவில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ள ஸ்மார்ட்போன் நிறுவனம், தனது ஐக்யூஓஓ 15ஐ அறிமுகம் செய்கிறது. கேமிங் மற்றும் கூடுதல் ப்ராசசர் போன்ற செயல் திறன்களுக்கு பெயர் பெற்ற இந்த ஸ்மார்ட்போன் 6.8 இன்ச் எல்டிபிஓஏஎம் ஓஎல்இடி டிஸ்ப்ளே கொண்டுள்ளது. 144 ஹெட்ச் ரேட், குவால்கம் ஸ்னாப் டிராகன் எயிட் எலைட் ஜென் 5 பிராசசர், 7,000 mAh பேட்டரி, மூன்று கேமரா போன்ற பல வசதிகள் இதில் இருக்கின்றன.

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement