Export WhatsApp Chats to Arattai App (Photo Credit : @RaghvendrYdv X)

செப்டம்பர் 30, சென்னை (Technology News): இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் நிறுவனங்களில் ஒன்றான ஜோஹோ (Zoho), 'அரட்டை' எனும் தனது புதிய மெசேஜிங் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. குறைந்த திறன் கொண்ட ஸ்மார்ட்போன்களிலும், இணையவேகம் குறைவாக இருந்தாலும் சிறப்பாக இயங்கும் வகையில் அரட்டை செயலியானது வடிவமைக்கப்பட்டுள்ளது. அரட்டை என்பது தமிழில் 'Casual Chat' என பொருள்படும். இந்தியாவின் முன்னணி ஜோஹோ நிறுவனத்தின் புதிய தகவல் தொடர்பு செயலி அரட்டை ஆகும். அனைத்து பயனர்களுக்கும் பயனளிக்கும் வகையில் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது. Arattai App: வாட்ஸ்அப்புக்கு சவால் விடும் அரட்டை செயலி.. நவம்பரில் மாஸ் அப்டேட்.! 

டிரெண்டிங்கில் அரட்டை செயலி:

டிஜிட்டல் மேம்பாடுகள் இல்லாத பகுதிகளிலும் இதனை எளிமையாக உபயோகிக்கலாம். இதன் மூலம் மெசேஜ், புகைப்படங்கள், வீடியோக்கள், ஆவணங்களை விரைவில் பகிர முடியும். குறைந்த இன்டர்நெட் வேகத்திலும் ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகளையும் மேற்கொள்ளலாம். கதைகள் பகிரவும், சேனல்களை நிர்வகிக்கவும் உதவுகிறது. இந்த செயலியானது மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலிக்கு மாற்றாக இந்தியாவில் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டு 'மேட் இன் இந்தியா' (Made In India) என்ற சிறப்பை பெற்றுள்ளது. வாட்ஸ்அப்பை போல அல்லாமல் குறைந்த இணைய வேகத்திலும் சிறப்பாக இயங்குவதாக பயனர்கள் தெரிவித்துள்ளனர்.

வாட்ஸ்அப் உரையாடல்களை ஏற்றுவது எப்படி?

இந்தியாவில் இதுவரையிலும் பெரும்பாலானோர் வாட்ஸ்அப்பை தங்களது தகவல்களை பரிமாற உபயோகித்து வருகின்றனர். தற்போது அரட்டை செயலியை புதிதாக உபயோகிக்கும் போது பழைய உரையாடல்கள் அழிவதற்கு வாய்ப்பு உள்ளது என்ற குழப்பம் மக்களிடையே எழுந்துள்ளது. அந்தக் குழப்பத்திற்கு தீர்வு காணும் வகையில் வாட்ஸ்அப்பில் உள்ள உரையாடல்களை அரட்டை செயலிக்கு எப்படி இம்போர்ட் செய்து தொடரலாம்? (How to Export WhatsApp Chats to Arattai App) என இந்த செய்திதொகுப்பின் மூலம் முழுமையாக அறியலாம்.

WhatsApp Chatsஐ Arattai App-க்கு இம்போர்ட் செய்வது எப்படி?

  • வாட்ஸ்அப் செயலியில் உள்ள உரையாடல்களை அரட்டை செயலிக்கு இம்போர்ட் செய்ய உங்களது தொடர்புகளை (Contacts) அரட்டை செயலிடன் இணைக்க வேண்டி இருக்கும்.
  • முதலில் நீங்கள் இம்போர்ட் செய்ய விரும்பும் நபர் அரட்டை செயலியில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அரட்டை செயலியுடன் தங்களது அனைத்து தொடர்புகளையும் Sync செய்வது அவசியம்.
  • Sync செய்த பிறகு தங்களது தொடர்புகள் அரட்டை செயலியில் தோன்றும். ஒருவேளை செயலியில் தோன்றவில்லை என்றால் 'Hi' என்ற குறுஞ்செய்தியை அனுப்பி உரையாடலை தொடங்கலாம்.
  • இதன் பின்னர் தங்களது வாட்ஸ்அப் செயலிக்கு சென்று தனிப்பட்ட நபர் அல்லது குழுவின் உரையாடலின் செட்டிங்ஸ்-ஐ கிளிக் செய்யவும் (மூன்று டாட்-க்கு செல்லவும்).
  • அடுத்ததாக More என்பதை கிளிக் செய்து எக்ஸ்போர்ட் சாட்ஸ் (Export Chats) என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
  • ஒருவேளை நீங்கள் முன்னதாக அனுப்பிய வீடியோ மற்றும் புகைப்படங்களும் வேண்டும் என்றால் அதனையும் சேர்த்து தேர்ந்தெடுக்கவும். அதற்கு Media என்ற பாக்ஸை கிளிக் செய்ய வேண்டும்.
  • எக்ஸ்போர்ட் என்பதை கொடுத்து அதில் உள்ள பட்டியலில் அரட்டை செயலியை தேர்வு செய்யவும்.
  • இறுதியாக அரட்டை ஆப்-ல் நீங்கள் இம்போர்ட் செய்ய விரும்பும் நபரின் கான்டக்ட் நம்பரை தேர்ந்தெடுத்து இம்போர்ட் (Import) என்பதை கிளிக் செய்தவுடன் வாட்ஸ்அப் செயலியில் இருந்து உங்களது அனைத்து உரையாடல்களும் அரட்டை செயலிக்கு ஏற்றப்படும்.

குறிப்பு: உங்களது காண்டாக்ட் நம்பரில் இருக்கும் நபர்கள் அரட்டை செயலியை பதிவிறக்கி சேர்ந்தால் மட்டுமே இதனை செய்ய இயலும். வாட்ஸ்அப் செயலியில் இருந்து உரையாடல்களை இம்போர்ட் செய்ய விரும்புபவர்கள் அரட்டை செயலியை டவுன்லோட் செய்து இருப்பதை உறுதி செய்தல் அவசியம்.