BSNL 5G Service: பிஎஸ்என்எல் 5ஜி சேவையின் சோதனை விரைவில் ஆரம்பம்; முழு விபரம் இதோ..!
இந்தியாவின் முக்கியமான பெரிய நகரங்களில் பிஎஸ்என்எல் தனது 5ஜி நெட்வொர்க்கிர்கான சோதனைகளை நடத்த திட்டமிட்டுள்ளது.
ஆகஸ்ட் 01, டெல்லி (Technology News): இந்தியாவில் உள்ள தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல், விஐ ஆகியவை கடந்த மாதம் தங்களது ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தியுள்ளன. இதன்காரணமாக ஏராளமான பயனர்கள் பிஎஸ்என்எல்-க்கு (BSNL) மாறியுள்ளனர். தற்போது, பிஎஸ்என்எல் மட்டுமே அதன் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தாமல் தொடர்ந்து நீடித்து வருகிறது. ஒருபுறம் பிஎஸ்என்எல் (Bharat Sanchar Nigam Limited) குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வரும் நிலையில், மறுபுறம் அதன் பயனர்களுக்கு மற்றொரு நல்ல செய்தியை தற்போது அறிவித்துள்ளது. Ransomware Attack: சிறிய அளவிலான 300 இந்திய வங்கிகளை குறிவைத்து சைபர் தாக்குதல்; அதிர்ச்சி தகவல்.!
தகவலின்படி, பிஎஸ்என்எல் தனது 5ஜி (BSNL 5G Network) சேவையை விரைவில் தொடங்கவுள்ளது. இந்த சேவை நாட்டின் சில நகரங்களில் மட்டுமே தொடங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இதனால், மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அச்சத்தில் உள்ளனர். பிஎஸ்என்எல் தனது 5ஜி நெட்வொர்க்கை உறுதிப்படுத்த வேகமாக முயற்சித்து வருகின்றது. இதன்மூலம் பிஎஸ்என்எல் பயனர்களுக்கு குறைந்த கட்டணத்தில் அழைப்பு சேவையும், மலிவான விலையில் அதிவேக நெட்வொர்க்கும் கிடைக்கும்.
இந்த சோதனையானது இன்னும் 3 மாதத்திற்குள் தொடங்கவுள்ளது. மேலும், தனது 5ஜி நெட்வொர்க்கின் முதல் சோதனையை டெல்லி, பெங்களூரு, ஹைதராபாத், குருகிராம் போன்ற பெரிய நகரங்களில் மேற்கொள்ளலாம் என கூறப்படுகின்றது.