Cyber Crime (Photo Credit: Pixabay)

ஆகஸ்ட் 01, புதுடெல்லி (Technology News): உலகளவில் தொழில்நுட்பம் அறிமுகமானத்திற்கு பின்னர், சைபர் குற்றங்களும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. தனிநபர்களின் வங்கிக்கணக்குகளில் இருக்கும் பணங்களை திருடுவதில் தொடங்கி, சைபர் திருட்டு, தொழில் நிறுவனங்களின் தனிப்பட்ட இணையக்கணக்குகளை குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல் போன்றவை மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கின்றன.

300 வங்கிகள் மீது தாக்குதல்:

இந்நிலையில், இந்தியாவில் செயல்பட்டு வரும் 300 க்கும் அதிகமான சிறிய அளவிலான உள்ளூர் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் தொழில்நுட்ப சேவை வழங்கும் மையங்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சம்பத்தப்பட்ட நிதி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன் ஆப்-கள், இணையப்பக்கங்கள் மீதும் சைபர் தாக்குதல் நடந்துள்ளது. Convert a Normal TV to a Smart TV: சாதாரண டிவியை ஸ்மார்ட் டிவியாக மாற்றுவது எப்படி? விபரம் உள்ளே..! 

தொழில்நுட்ப அமைப்பில் தாக்குதல்:

இந்தியாவில் உள்ள சிறிய வங்கிகளுகளுக்கான தொழில்நுட்ப அமைப்பை வழங்கும் சி-எட்ஜ் தொழில்நுட்ப அமைப்புகளை குறிவைத்து முதலில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. என்பிசிஐ எனப்படும் இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் சார்பில் பணம் செலுத்தும் வழிமுறைகளை மேற்பார்வையிட சி-எட்ஜ் (C Edge) தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், அதன் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் பயனர்களின் பணம் உட்பட எந்த தகவலையும் அணுக இயலாது என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல, ஏற்கனவே கடந்த வாரம் ரிசர்வ் வங்கி சைபர் தாக்குதல்கள் தொடர்பாக முன்னெச்சரிக்கையும் வழங்கி இருந்தது.