Samsung Smartphone Hacking: சாம்சங் கேலக்சி ஸ்மார்ட்போன்களை குறிவைக்கும் ஹேக்கர்கள்: தப்பிப்பது எப்படி??.. எச்சரிக்கையுடன் அறிவுறுத்திய மத்திய அரசு.!
சிஸ்டம் ஓஎஸ் அப்டேட் செய்யாத நபர்களை குறிவைத்து, சாம்சங் கேலக்சி பயனர்களின் விபரங்கள் சைபர் குற்றவாளிகளால் திருடப்படுகிறது என மத்திய அரசு எச்சரித்துள்ளது.
டிசம்பர் 16, புதுடெல்லி (New Delhi): சர்வதேச அளவில் மிகப்பெரிய செல்போன் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் சாம்சங்-க்கு, மக்களிடம் எப்போதும் தனிப்பட்ட வரவேற்பு இருக்கும். சாம்சங்கின் தரம் மற்றும் நீடித்து உழைக்கும் திறன் போன்றவையாக, பலரும் அதனை விரும்பி வாங்குகிறார்கள். சாம்சங் நிறுவனமும் தற்போதைய தொழில்நுட்ப உலகுக்கேற்ப செல்போனில் தொடங்கி பல பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.
சாம்சங் கேலக்சி பயனர்கள் கவனம்: இந்நிலையில், சாம்சங் கேலக்சி ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு மத்திய அரசின் சியர்ட் (Indian Computer Emergency Response Team - CERT) துறை சார்பில் எச்சரிக்கை ஒன்று விடப்பட்டுள்ளது. அதாவது, சாம்சங் கேலக்சி (Samsung Galaxy Risk) ஸ்மார்ட்போன்கள் ஹேக்கர்களின் பிடியில் சிக்க வலைவிரிக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சனையை தவிர்க்க கேலக்சி பயனர்கள் தங்களின் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை (Update System OS) அப்டேட் செய்துகொள்ளுமாறும் அறிவுறுத்தி இருக்கிறது. Simple Energy: சிம்பிள் எனெர்ஜியின் புதிய இ-ஸ்கூட்டர்… இவ்வளவு விலை குறைவா..!
ஹேக்கிங் செய்யப்படும் ஸ்மார்ட்போன்கள்: சமூக வலைத்தளங்களில் சாம்சங் கேலக்சி பயனர்கள் தங்களின் கடவுச்சொல்லை சரியாக பதிவிட்டும் செல்போனில் உள்நுழைய முடியாமல், சமூக பக்கங்களை உபயோகம் செய்ய முடியாமல் அவதிப்பட்டது தொடர்பாக கிடைக்கப்பெற்ற புகாரின் பேரில் நடந்த ஆய்வில், சாம்சங் கேலக்சி பயனர்களின் விபரங்கள் ஹேக்கிங் செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய மக்கள் விரும்பும் சாம்சங்: இந்தியாவை பொறுத்தமட்டில் சாம்சங் நிறுவனத்தின் 28.6 மில்லியன் ஸ்மார்ட்போன்கள் கடந்த 2022ம் ஆண்டில் விற்பனை செய்யப்பட்டது. இவற்றில் பெரும்பாலானவை கேலக்சி ரக ஸ்மார்ட்போன்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. அரசின் அறிவுரையை சரிவர ஏற்காமல், ஸ்மார்ட்போன்களை அப்டேட் செய்யாமல் இருந்தால் ஏற்படும் பின்விளைவுகளையும் சியர்ட் தெரிவித்துள்ளது. Bangalore Shocker: மதுபான விடுதிக்கு சென்றுவந்த பெண் கடத்தி கற்பழிப்பு: தள்ளாடிய போதையில் பெண்ணுக்கு நடந்த சோகம்.!
அறிவுரையை மதிக்காமல் விட்டால் நடக்கும் விளைவுகள்: அதன்படி, "செல்போனின் சிம் பின் எனப்படும் ரகசிய குறியீடு எண் திருடப்படும், ஏஆர் எமோஜி உபயோகம் செய்யும் நபர்களின் விபரங்கள் திருடப்படும், செல்போனில் சேமித்து வைக்கப்பட்டுள்ள விபரங்கள் கண்காணிக்கப்படும், கைப்பாவை போல ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துவார்கள். இறுதியாக நமது பயன்பாடுகள் என்பது அவர்களின் கையில் இருக்கும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட் யுகம்: தொழில்நுட்ப உலகில் சைபர் குற்றங்கள் நடந்துகொண்டு இருக்கின்றன. அவற்றை தடுக்க அரசு பல வழிகளில் முயற்சி செய்தாலும், அவற்றை ஓரளவுக்கே கட்டுப்படுத்த இயலுகிறது. எஞ்சியவை நமது விழிப்புணர்வின் மூலமாக மட்டுமே சாத்தியப்படும்.