Cisco Layoffs: சிஸ்கோ நிறுவனத்தில் 2-வது முறையாக பணிநீக்கம்; ஊழியர்கள் அதிர்ச்சி..!

அமெரிக்காவில் இயங்கி வரும் சிஸ்கோ நிறுவனம் தனது பணியாளர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக அதிரடியாக அறிவித்துள்ளது.

Cisco Logo (Photo Credit: Wikipedia)

ஆகஸ்ட் 10, சான் ஜோஸ் (Technology News): அமெரிக்காவில் சான் ஜோஸ் (San Jose), கலிபோர்னியாவை (California) தளமாகக் கொண்ட நெட்வொர்க்கிங் நிறுவனமான சிஸ்கோ (Cisco) இந்த ஆண்டு 2-வது முறையாக பணியாளர்களை பணிநீக்கம் (Layoffs) செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த நிறுவனம் சைபர் செக்யூரிட்டி () மற்றும் AI ஆகியவற்றில் கவனம் செலுத்தவுள்ளதால், 2-வது முறையாக பணிநீக்கம் செய்ய முடிவுசெய்துள்ளது. இதன் அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Vivo V40 Pro: அசத்தலான அம்சங்களுடன் விவோ வி40 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.. முழு விவரம் இதோ..!

இந்நிலையில், கடந்த மாதம் பிப்ரவரியில் சிஸ்கோ பணிநீக்கம் செய்யப்பட்ட 4,000 ஊழியர்களை விட சற்று அதிகமாகவே இருக்கும் என குறிப்பிட்டுள்ளது. 2023-ஆம் ஆண்டு ஜூலை மாத நிலவரப்படி, நிறுவனம் சுமார் 84,900 நபர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளது. நிறுவனம் AI தயாரிப்புகளை இணைக்க முயற்சித்து வருகிறது, மேலும், 2025-ஆம் ஆண்டில் 1 பில்லியன் டாலர் மதிப்புள்ள AI தயாரிப்பு ஆர்டர்கள் என்ற இலக்கை வலியுறுத்தியது.

ஜூன் மாதம் கோஹேர், மிஸ்ட்ரல் போன்ற AI ஸ்டார்ட்அப்களில் முதலீடு செய்ய $1 பில்லியன் நிதியை அறிமுகப்படுத்தியுள்ளது. AI மற்றும் சைபர் செக்யூரிட்டி ஆகிய துறைகளில் வளர, செயற்கை நுண்ணறிவில் (Artificial Intelligence) பணிபுரியும் 20 ஸ்டார்ட்அப்களை கையகப்படுத்தி முதலீடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.