Bullet Proof Jacket: லெவல் 6-க்கான குண்டுதுளைக்காத ஜாக்கெட்டை வெற்றிகரமாக சோதனை செய்த இந்தியா; டிஆர்டிஓ அறிவிப்பு.!
அந்த வகையில், லெவல் 6-க்கான குண்டுதுளைக்காத ஜாக்கெட் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 24, புதுடெல்லி (New Delhi): இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (Defence Research and Development Organisation DRDO), இராணுவ தளவாடங்கள் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது. இந்திய இராணுவத்தின் பயன்பாட்டுக்காக பல புதிய ஏவுகணைகள், துப்பாக்கிகளும் டிஆர்டிஓ நிறுவனத்தால் தயாரிக்கப்படுகின்றன. அதுசார்ந்த ஆராய்ச்சியும் செய்யப்படுகின்றன. இந்நிலையில், கடந்த 2018ம் ஆண்டில் இருந்து டிஆர்டிஓ, இராணுவ வீரர்கள் மற்றும் உயரடுக்கு பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவோர் அணியும் பாதுகாப்பு கவசத்தில், ஆறாவது தரநிலைக்கான (Level 6 Bulletproof Jacket) பாதுகாப்பு கவசத்தை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தது. தற்போது அந்த சோதனைகள் அனைத்தும் வெற்றியடைந்து, லெவல் 6 அளவிலான ஜாக்கெட் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. Bajaj Pulsar NS400 Teaser Released: பொல்லாதவன் தனுஷ் முதல் விஸ்வாசம் அஜித் வரைன் கலக்கிய பல்சர் பைக்.. வெளியாகும் தேதி அறிவிப்பு..!
ஸ்னைப்பரால் 6 முறை சுட்டாலும் தாங்கும் திறன்: இந்த ரக ஜாக்கெட் 7.62 x 54 R API (Level 6 of BIS 17051) அளவிலான தாக்குதலையும் தாங்கும் திறன் கொண்டது ஆகும். சமீபத்தில் புல்லட்புரூப் ஜாக்கெட்டுகள் சத்தீஸ்கரில் உள்ள டிபிஆர்எல் (Terminal Ballistics Research Laboratory TBRL) அலுவலகத்தில் சோதனையும் செய்யப்பட்டது. இனிவரும் காலத்தில் இந்த ஜாக்கெட்டுகளை பாதுகாப்பு படைக்கு விநியோகம் செய்யவும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. தற்போது டிஆர்டிஓ நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ள ஜாக்கெட், ஹேப் (Hard Armour Panel HAP) என்ற முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனால் தூரத்தில் இருந்து அதிவேகத்தில் இலக்கை தாக்கும் ஸ்னைப்பர் (Sniper) முறையில் தாக்குதல் நடத்தினாலும், 6 புல்லட்டுகளை திறம்பட எதிர்கொள்ளும் தன்மை கொண்டது ஆகும். ஹேப் என்பது மோனோலிதிக் செராமிக் பிளேட் மற்றும் பாலிமர் கொண்டு உருவாக்கப்படும் பொருள் ஆகும்.
தாக்குதல் சக்தியில் இருந்து வெளிப்படும் பலத்தை 40 Kg/m2 அளவில் மேற்கூறிய பாதுகாப்பு கவசம் எதிர்கொள்ளும்.