Elon Musk Celebrates Dog Birthday: எலான் மிஸ்கின் செல்லப்பிராணிக்கு இன்று குவா., குவா டே.. கேக் வெட்டி கொண்டாட்டம்.!

உலக செல்வந்தராக இருந்தாலும், குறும்புத்தன விவாதங்களால் தன்னை திரும்பி பார்க்கவைத்த எலான் மிஸ்கின் வீட்டில் உள்ள செல்லப்பிராணியான நாய்க்கு இன்று பிறந்தநாள்.

Elon Musk Dog Birthday (Photo Credit: X)

நவம்பர் 01, டெக்ஸஸ் (Technology News): உலக செல்வந்தர்களில் ஒருவரும், ஸ்பேஸ் எக்ஸ், ஸ்டார்லிங், டெஸ்லா, சாட் ஜிபிடி, ஓபன் ஏஐ உட்பட பல்வேறு நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரி மற்றும் நிறுவனருமான எலான் மஸ்க் (Elon Musk), சர்வதேச அளவில் கவனிக்கப்படும் முக்கிய நபர்களில் ஒருவராக இருந்து வருகிறார்.

இவரின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், பல தோல்விகளை கண்டு பின் வெற்றிகரமாக சாதனை செய்தது. இதனைத்தொடர்ந்தே இவர் சர்வதேச அளவில் பிரபலமாக அறியப்பட்டார். Sunny Leone Daughter Birthday: டிஸ்னி லேண்டில் கொண்டாட்டங்களுக்கு நடுவே, தனது மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துச்சொன்ன சன்னி லியோன்.! 

எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம் தொடர்ந்து எதிர்காலத்திற்கான கார்களை உருவாக்கி வருகிறது. ட்விட்டர் பக்கத்தை இவர் வாங்கியதிலிருந்து, பல அதிரடி சம்பவங்களையும் நிகழ்த்திவிட்ட நிலையில், அதில் அவ்வப்போது குறும்புத்தனங்கள் செய்வதும் உண்டு.

இந்த நிலையில், அவரின் வீட்டில் உள்ள செல்லப்பிராணியான மார்பின் என்ற நாய்க்குட்டிக்கு இன்று பிறந்தநாள். அதனையொட்டி, நாய்க்கு கேக் வாங்கிக்கொடுத்து பிறந்தநாள் சிறப்பிக்கப்பட்டது. எலான் மாஸ்க் இதுகுறித்த புகைப்படத்தை தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.