Free Aadhaar Update: உடனே ஆதார் கார்டில் இதை செஞ்சிடுங்க.. இல்லையெனில் கட்டணம்!!
ஆதார் (Aadhaar) அட்டையில் உள்ள விவரங்களை இலவசமாக மாற்றம் செய்ய கடைசி 13 நாட்கள் மட்டுமே உள்ளன.
செப்டம்பர் 02, புதுடெல்லி (New Delhi): தனிமனிதரின் அடையாளமாக மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்ட ஆதார் (Aadhar Card), இன்றளவு ஒவ்வொரு செயல்பாட்டிற்கும் அடையாள அட்டையாக கருதப்படுகிறது. ஒவ்வொரு இந்தியர்களின் தரவுகளையும் அரசு எளிதில் கண்காணிக்கும் வகையிலும், அவர்களுக்கு உரிய அரசு அறிவிப்புகள் சரியான வகையில் சென்றடைவதை உறுதி செய்யும் பொருட்டும் ஆதார் அவசியமாக்கப்பட்டது. இந்நிலையில் ஆதார் கார்டுகளில் மாற்றங்களை செய்ய திருத்த கால அவகாசம் செப்டம்பர் 14ம் தேதி வரை கொடுக்கப்பட்டு உள்ளது. How to Block an ATM Card: உங்கள் ஏடிஎம் கார்டு காணாம போச்சா? அப்போ உடனே பிளாக் பண்ணுங்க..!
ஆதார் அட்டையில் உள்ள தவறான விவரங்களை ஆன்லைனில் மாற்ற பயனர்கள் கட்டணம் செலுத்த தேவை இல்லை. முகவரி போன்ற விவரங்களைப் புதுப்பிப்பதற்கு இது பொருந்தும். அதே பெயர், மொபைல் எண், போட்டோ மாற்றம் போன்றவற்றுக்கு ஆதார் மையத்திற்கு செல்ல வேண்டும். அதாவது செப்டம்பர் மாதத்திற்கு பிறகு ஆதார் அட்டை வைத்திருப்பவர்களுக்கு இலவச சேவை கிடைக்காது. மேலும், 10 ஆண்டுகளாக ஆதார் அட்டை விவரங்களை புதுப்பிக்காதவர்கள் இந்த இலவச சேவைகளைப் பயன்படுத்தி புதுப்பிக்கலாம்.
எவ்வாறு திருத்தும் செய்வது?: uidai.gov.in அல்லது https://myaadhaar.uidai.gov.in/genricPVC மூலம் ஆதார் எண் அல்லது என்ரோல்மென்ட் ஐடி மூலம் அட்டையின் விலாசத்தை புதுப்பிக்க முடியும். இதற்கு கட்டணம் இப்போது இல்லை. மேலும் மை ஆதார் (myAadhaar) என்ற செயலியில் உங்கள் ஆதார் எண்ணை வைத்து லாகின் செய்து, அதிலேயே பணம் செலுத்தாமல் விவரங்களை மாற்ற முடியும்.