Instagram Service Down: ரீலிஸ், ஸ்டோரி பக்கங்களை பார்க்க முடியாமல் அவதிப்படும் பயனர்கள்; உலகளவில் முடங்கியது இன்ஸ்டாகிராம்.!

மேலும், இன்ஸ்டாகிராம் முடக்கத்தையும் கலாய்த்து வருகின்றனர்.

Instagram Down (Photo Credit: Team LatestLY)

ஜூன் 29, புதுடெல்லி (Technology News): உலகளவில் நாளொன்றுக்கு 2 பில்லியன் பயனர்கள் தினமும் பயன்படுத்தும் செயலியாக இருக்கும் இன்ஸ்டாகிராம், மெட்டா நிறுவனத்தின் அங்கம் ஆகும். பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்சப், திரெட்ஸ் போன்ற சமூக வலைத்தளங்களின் சேவையை மெட்டா ஒருங்கே வழங்கி வருகிறது. #Breaking: லடாக் எல்லையில் சோகம்; பயிற்சியில் ஈடுபட்ட இராணுவ வீரர்கள் 5 பேர் வெள்ளத்தில் சிக்கி பலி.! 

உலகளவில் முடங்கிப்போனது:

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பயனர்கள் தங்களுக்கு பிடித்த பாடல்களுடன் கொண்ட காணொளிகளை சிறிய விடியோவாக பதிவு செய்து வரவேற்பை பெறுவார்கள். பிரதானமான சாட்டிங் செயலியாகவும் இன்ஸ்டாகிராம் இருந்து வருகிறது. அவ்வப்போது, இன்ஸ்டாகிராம் உட்பட சில சமூக வலைதள செயலிகள் தொழில்நுட்ப கோளாறுகளை எதிர்கொள்வது உண்டு.

அந்த வகையில், தற்போது இன்ஸ்டாகிராம் பக்கம் உலகளவில் முடங்கி இருக்கிறது. பயனர்கள் ரீல்ஸ், பிற பயனர்களின் பதிவேற்றங்கள் போன்றவற்றை காண இயலாமல் அவதிப்பட்டுள்ளனர். இதனால் அதனை உலகுக்கு தெரிவிக்கும்பொருட்டு, எக்ஸ் பக்கத்தில் Instagram Down என்ற ஹேஷ்டேக்கையும் ட்ரெண்டிங் செய்து வருகின்றனர்.

தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் பணியில் இன்ஸ்டாகிராம் பிரிவு ஈடுபட்டு வருகிறது.

இன்ஸ்டாகிராம் சேவை செயலிழப்பை கலாய்க்கும் நெட்டிசன்: